பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பேராசிரியர் அ.சங்கரவள்ளி நாயகம் அவர்கள், கோயிற்பட்டி திரு.இராம. பெரியகருப்பன் அவர்கள், தாளாளர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி. திரு. டாக்டர். தமிழண்ணல் அவர்கள், மதுரைப்பல்கலைக்கழகம், மதுரை. ஏற்புரை : கவியரசு முடியரசனார் அவர்கள் தலைவர் முடிவுரை: நன்றியுரை : புலவர்.ஆ. பழநி அவர்கள் இதனைத் தந்துவிட்டு, அண்ணன்! பத்தாயிரம் வரை சேர்ந்திருக் கிறது? என்றார். அடே ஐந்நூறு உரூவா வரும் என எண்ணியிருந் தேன். எப்படிப் பத்தாயிரம் சேர்த்தீர்கள்? என்று வியந்தேன். ‘எப்படியோசேர்த்தோம். உங்களுக்கென்ன.அதைப்பற்றி பணம் வருகிறதேயென்று முன்கூட்டியே கடன் வாங்கி விடாதீர்கள். பணத்தை உங்களிடம் தரமாட்டோம். உங்களைத் தெரிந்துதான் இப்படிச் சொல்கிறேன். ஒய்வு பெற்ற நீங்கள் அல்லியின் திருமணத் துக்கு என்ன செய்வீர்கள்! அதனால் இதை வங்கியில் போட்டு விடுவோம். திருமணத்தின் போது எடுத்துக் கொள்ளலாம் - என்று சொல்லிச் சென்றார். என் வாழ்க்கையில் அவர் கொண்டுள்ள அக்கறையும் அன்பும் என்னை உருக்கி விட்டன. இத்தகையோர் அன்பைப் பெறாதிருப்பின் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும்! அறிக்கையிற் கண்டவாறு, தவத்திரு அடிகளார் தலைமையில் விழாநடைபெற்றது. புலவர்மருதவாணனும்முனைவர்தமிழண்ணலும் வர இயலவில்லை. என் முன்னாள் மாணவர்கள் முனைவர் வெ.சு.அழகப்பனும் புலவர் யூ.கா.அமீதும் நிறைவு செய்தனர். என்பாற் பேரன்புடைய அடிகளார், மனந்திறந்து பாராட்டி, வாழ்த்திவிட்டு, என்னை நாத்திகனென்று குறிப்பாகக் கூறினார். பத்தாயிரம் என எழுதப்பட்ட காசோலை வழங்கிப் பொன்னாடை போர்த்துச் சிறப்பித்தார் என் முன்னாள் மாணவர் மெய்யப்பன். படிக்கராமு, நான் பாடங்கற்பித்த முறை, பாடற் சிறப்பு, என் இயல்புகள் முதலியனவற்றை எடுத்து மொழிந்து என் உயிர் காத்த