பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கவியரசர்முடியரசன் படைப்புகள்-10, இடையில் கலைஞர், காசோலை எடுத்து வருமாறு சாதி பாட்சாவிடம் கூற அந்நேரத்தில் அலுவலகம் சென்று உடே எடுத்து வந்தார். கலைஞர் எனக்குப் பொன்னாடை போர்த்து, மிகப் பெரிய வாழ்த்து மடலொன்றும் வழங்கி, பத்தாயிரம் உருவா வழங்கினார். 'கவிஞர் முடியரசனாருக்குப் பத்தாயிரம் வழங்குகிறோம்; இது, அவருக்குப் பத்தாத g್ಟ್ எனினும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வழங்கினார். | எனது நன்றியுரையில், தி.மு.கழக வரலாறு எழுதப்பட வேண்டு மென்று வேண்டிக்கொண்டேன். அண்ணன் அழகு வேலனார். முன்னை நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக்கூறக் கேட்டமையும் மலர்க்கோலம் பூண்ட இவ்வழகிய திருமண மண்டபத்தைக் கண்டமையும் என் பழைய நினைவுகளை யெல்லாம் கண்முன் கொண்டு வந்து சேர்த்தன என்றேன். கவிஞர் பொன்னி, கவிஞர் குடியரசு போன்றோர் தமது வறிய நிலையை எடுத்துக் காட்டினர். நானும் அவ்வரிசையில் இடம் பெறுபவன்தான். எனினும் ஏன்திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறோம்? எங்கள் நலனை விட இனத்தின் நலனையே பெரிதாகக் கருதுகிறோம். நம் இனத்திற்கு தி. மு. கழகத்தால் நலம் உண்டாகிறது என நம்பியே ஒட்டிக் கொண்டிருக் கிறோம் என்று குறிப்பிட்டேன். நம் தலைவர்களை ஐயா, அண்ணா என உறவுமுறையால் அழைத்தது போலக் கலைஞரையும் சின்ன அண்ணா என அழைத்தல் வேண்டும் எனவும் அவையை வேண்டிக் கொண்டு அமர்ந்து விட்டேன். கலைஞர் பேசும் பொழுது, கவிஞர் முடியரசனார் தமது உரையில் என்னைச் சின்ன அண்ணா என அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நமக்கு ஒரு அண்ணா போதும். சின்ன அண்ணா பெரியண்ணா வேண்டாம். அப்படி உறவு முறையில் அழைக்கவிரும்பினால் நான்தான் உடன்பிறப்பே என்று அழைக் கின்றேனே. அதில் உறவுமுறையில்லையா? முடியரசன் இத்திருமண மண்டபத்தைப் பார்த்ததும் தமக்குப் பழைய நினைவுகளெல்லாம் வருகின்றன என்று குறிப்பிட்டார். அந்தப் பழைய நினைவுகளிலே மயங்கி, உடன் பிறப்பே என நான் சொல்வதை மறந்து விட்டார் போலும் என்றதும் அவையே அதிர்ந்தது.