பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் 145 கழக வரலாறு வேண்டினேன். அதற்கு மறுமொழியில்லை. இன்றும் அவ்வேண்டுகோளை விடுக்கிறேன். அதன் இன்றிய மையாமை கருதி நாளை வரும் இளைஞர்க்குத் திராவிட இயக்கத்தின் அருமை பெருமைகள் தெரிய வேண்டாவா? இப்பொழுதே சில உண்மைகள் திரிபுபட எழுதப்படுகின்றன. நாளை, மறுநாள் என்னாகும்? கழக வரலாறு பற்றி, ஒரு நூல் வந்திருப்பினும் அது போதாது ஆதலின் கழக வரலாறு தோன்றியே ஆக வேண்டும். சென்னையில் நடைபெற்ற மணி விழாவையறிந்த, நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த டார்பீடோ ஏ.பி. சனார்த்தனம் வாழ்த்து எழுதி, உங்கள் சுயமரியாதை உணர்வுகளுக்கு கிடைத்த பாராட்டு இது என்று குறிப்பிட்டுத்தில்லியிலிருந்து மடல் விடுத்தார். பிறிதொருகால் அவர்என்இல்லத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது பாவலர் மணி பழநியும் உடனிருந்தார். என் கருத்தை மாற்றும் நோக்கிற் பலப் பல எடுத்து மொழிந்தார். நானும் பழநியும் ஒவ்வொன்றையும் மறுத்துப் பேசினோம். ஐயாவும் அண்ணாவும் பாடுபட்டுப் பரப்பிய சுயமரியாதை உணர்வு அழிக்கப்பட்டு விட்டதே என வருந்திக் கூறினோம். அவர் இல்லை இல்லை இந்த ஆட்சி சுயமரியாதை ஆட்சி தான் என வாதாடினார். சுய மரியாதை என்பதற்கு எப்பொருள் கொண்டு வாதிட்டாரோ தெரியவில்லை. பாராட்டத் தக்க - அத்தகைய சுயமரியாதை வீரர்களெல்லாம் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு மாறி விட்டனரே எனப் பெரிதும் வருந்தினோம்.