பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வானம்பாடி யான் எழுத அமர்ந்து விடின் என்னை முழுமையாக மறந்து விடுவேன்; இல்லத்தை மறந்து விடுவேன்; என்னைச் சுற்றி நிகழ் வனவும் அறியேன். அப்பொழுது யான் பறந்து திரியும் உலகம் வேறு. எந்நேரத்திலும் எழுதுவேன்; எவ்வளவு நேரமானாலும் எழுதுவேன். எழுதி முடித்து எழும்பொழுதுதான் தெரியும் என் கால் வலியும் இடுப்பு வலியும். எழுத்தளிக்கும் இன்பம் அறிந்தமையான் யானறியேன் இடுப்போடி ருகால் வலி இடுப்பு வலியின்றி மகப்பேறு நிகழுமோ? அவ் வலியைத் தாங்கிக் கொண்டு ஈன்றெடுத்த மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய், ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் அன்றோ? எழுதும் பொழுது இவ்வாறு வலியறியாது, கற்பனை வானிற் பறந்து கொண்டிருந்த காரணத்தினாற்றான், பேரறிஞர் அண்ணா அவர்கள் முடியரசன் திராவிட நாட்டின் வானம் பாடி' எனக் குறிப்பிட்டனர் போலும். வானம் பாடியாகப் பறந்து திரிந்து பாடிய நூல்கள் பற்றிச் சில குறிப்புகளை ஈண்டுத் தருகின்றேன். என் இலக்கியப் பணி பெரிது எனச் சுட்டிக் காட்ட இயலா விடினும் படைப்பாளர் வரிசையில் எனக்கும் ஒரிடம் உண்டு என்பது உண்மை. நமக்குத் தொழில் கவிதை' என்ற கோட் பாடுடையவன் நான். அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சி களுக்கும் சூழ்நிலைகளுக்கும் கவிதை வடிவங் கொடுப்பேன். தமிழகமெங்கணும் உள்ள பல நகரங்களில் நிகழ்ந்த இலக்கிய விழாக்களில், வானொலியில், உலகத்தமிழ் மாநாட்டில் நடைபெற்ற கவியரங்குகளில் பங்கு கொண்டுள்ளேன். பாடல் எழுதுவதன்றி,