பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அகப்படும் மலையானார். அக்காலை என் முதற்றொகுதியைக் கொடுத்தேன். பெற்றவுடன் கவிதை என்ற வடசொல்லை ஏன் வழங்கினர்கள்?’ என்றார். என்னைத் தணலில் துக்கி எறிந்தது ப்ோலிருந்தது. உடனே அப்பெருமகனார் 'ம் ம், குற்றமில்லை; பயில்வார் தம் நெஞ்சத்தைத் தன்பாற் கவிய வைப்பது கவிதை ஆதலின் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளலாம்; கவலற்க' - என ஆறுதல் கூறினார். அதன் பிறகு கவிதையென்ற சொல்லைத்துணிந்து பயன்படுத்தி வருகின்றேன். அப்பெருமகனார். காட்டுப்பாடி சேர்ந்ததும் ஒர் அஞ்சலட்டை விடுத்தார். வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்கும் தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த முடியரசரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை. என்ற பாடலைத் தாங்கி வந்தது அவ்வஞ்சலட்டை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை காரைக்குடிக்கு வந்து தங்கியிருந்த பொழுது, அவரைக் காணும் பொருட்டுச் சென்றோம். என் முதற்றொகுதியைத் தந்தோம். வாங்கிப் படித்து விட்டு மயிலை சிவ.முத்துவை உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று வினவினார். நான் எங்கள் தொடர்பை விளக்கிக் கூறினேன். பின்னர், பாரதி தாசனைப் பற்றி நான் பாடிய பாடல்கள் முழுமையும் படித்தார். அப்பொழுது பூவாளுர் பொன்னம்பலனா சில மாத்திரைகள் கொடுக்க, அவற்றை வாங்கியுண்டார். உண்டதும் 'அண்ணா! ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பொன்னம் பலனார். "ஆம், களைப்பாக இருக்கிறது என்று கூறிக் கால்களை மடக்கியவாறு படுத்துக் கொண்டார். நன்றாகக் கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள் அண்ணா என்றார் பொன்னம்பலனார். அண்ணா அப்பொழுதும் கால்களை மடக்கிக் கொண்டே படுத்திருந்தார். நாங்கள் கால் மாட்டில் அமர்ந்திருப்பதால் கால்களை மட்க்கிக் கொண்டார் என்ற குறிப்பைத் தெரிந்து கொண்டோம். உடனே நாங்கள் எழுந்து 'அண்ணா நன்றாகப் படுத்துக் கொள்ளுங்கள்” என்றோம், பின்னர்