பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 149 நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டார். நாங்கள் சிறியவர்கள். அவரோ நாட்டின் தலைவர். எனினும் கால்களை மடக்கிக் கொண்டார். அப்பெருந்தகையின் அடக்கவுணர்வை எத்தலைவரிடம் காணல்கூடும்?. அந்த ஆண்டு வெளிவந்த திராவிட நாடு’ பொங்கல் மலரில் என் கவிதைகள் சிலவற்றை மேற்கோள் காட்டிக் கட்டுரையெழுதி யிருந்தார். அடுத்தடுத்து வந்த மலர்களிலும் குறிப்பிட்டிருந்தார். பிறிதொருகால், மொழிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நான் எழுதிய பூங்கொடிக் காப்பியமும் கொடுத்தேன். அந்நூல் பற்றி அண்ணா ஒன்றும் எழுதவில்லையே! அப்பேறு பெற்றிலோமே! என வருந்துவதுண்டு. நானாவது வேண்டிப் பெற்றிருக்கலாம்; என் கூச்சவுணர்வு தடையாக அமைந்து விட்டது. அடுத்து, என் பாக்களிற் சில ஒரு நூலாகத் தொகுக்கப் பட்டு, அதே பெயரில் வெளியிடப்பட்டது. இந்நூல், புதுக்கோட்டை மருத்துவப்பேரறிஞர் வி.கே.இராமச்சந்திரனாருக்குக் காணிக்கை யாக்கப்பட்டது. பின்னர் இரண்டும் ஒரே தொகுதியாகப் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இது 1966 ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசிலைப் பெற்றது. சில பாடல்கள், சாகித்திய அகாதெமியால் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. காவியப்பாவை அப்பொழுதெல்லாம் பெரும் புகழ் பெற்ற இசை வாணர்கள், இசையரங்குகளிற் பிற மொழிப் பாடல்களே பாடிவதைப்பர் (இப்போதும் அப்படித் தானே) கேட்டுக் கேட்டு மனம் நொந்த நான், இசை நுணுக்கம் அறியா விடினும் நானே ஒர் ஒசையை அமைத்துக் கொண்டு சில பாடல்களைப் புனைந்து, காவியப் பாவை என்ற பெயரில் வெளியிட்டேன். தமிழிசைத் தொண்டு புரிந்த செட்டிநாட்டரசர்க்குக் காணிக்கையாக்கினேன். பேராசிரியர் இலக்குவனார் கூட ஏதேனும் பயன் கருதிச் செட்டி நாட்டரசர்க்குக் காணிக்கை யாக்கினர்களா?' என்று வினவினார். எனக்கு அஃது அருவருப்பாக இருந்தது. சொந்த மொழியிசையைச் சூழ்ந்த பனியகல வந்த பரிதியென வந்தமையால் சிந்தித்துப்