பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- Tলকা கவியரசர் முடியரசன் படைப்புகள்-1பு பண்ணால் அமைநூல் படைத்து மகிழ்கின்றேன் அண்ணா மலைமன் அடிக்கு. - என்ற என் வெண்பாவை மட்டுங் காட்டினேன். இந்நூலில் வரும் பாடல் சில, சாகித்திய அகாதெமியால் மொழிபெயர்க்கப் பெற்றன. கவியரங்கில் முடியரசன் அரங்கேறிய பாடல்கள் சில தொகுக்கப்பெற்றுக் கவியரங்கில் முடியரசன்' என்ற நூலாகத் திருச்சி முத்துப்பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல்எனக்குத்தமிழறிவுறுத்திய மீமுத்துசாமிப் புலவர்க்குக் காணிக்கையாக்கப்பட்டது. செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார் இந்நூலுக்கு முன்னுரை ஈந்தனர். அதனைப் படித்துப் பார்த்த தமிழண்ணல், அதன் அருமை பெருமைகளை உணர்ந்து முன்னுரை என்பதைப் 'பொன்னுரை யெனத்திருத்தி வெளியிட்டார். முன்னுரையில் சிதம்பரநாதர் முடியரசன் மாணவருள் நானும் ஒருவன்' எனக் குறிப்பிட்டி ருந்தார். என் உள்ளமே சிலிர்த்து விட்டது. அப் பெருமகனா இச் சிறியனை இவ்வாறெழுதுவது? என்று நாணினேன். செந்தமிழ்க் காவலரை ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. என்னைப் பற்றி அதிகமாகவே எழுதி விட்டீர்கள் என நெகிழ்ந்து கூறினேன். 'உங்களைப் பற்றியொன்றும் எழுதவில்லையே; உங்கள் கவிதை பற்றித்தான் எழுதியிருக்கிறேன்' எனப்பட்டென்று கூறிவிட்டார். அத்துய தமிழ் நெஞ்சங்களையெல்லாம் எண்ணும் பொழுது உருகி விடுகிறேன். வீரகாவியம் முனைவர் மா.இராசமாணிக்கனார், மாத்யூ அர்னால்டு என்பார் கவிதை வடிவில் ஆங்கிலத்தில் எழுதிய பாரசிகக் கதை யொன்றைத் தந்து, இதனைக் காப்பியமாக எழுதுக' எனப் பணித்தனர். எனக்கு ஆங்கிலமே தெரியாது. பிறர்துணையால் எழுதலாமென எண்ணி, அக்கதை முழுமையும் தெரிந்து கொள்ள வேண்டி, பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு எழுதினேன். சில விளக்கங்கள்.அவர்களால் கிடைத்தன. நாகசாமி ஐயர் என்பவர், ஆங்கிலக் கவிதையைப் படித்துப் பொருள் சொல்லக் கேட்டுத் தமிழ் மரபிற்கேற்ப, அக் கவிதையைத்