பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புகழ்ச் சிட்டு 1950ஆம் ஆண்டு, கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. கவிதைப் போட்டியும் வைத்திருந்தனர். அழகின் சிரிப்பு என்பது தலைப்பு. நாவலர் சோமசுந்தர பாரதியார், பன்மொழிப்புலவர் கா.அப்பா துரையார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மூவரும் நடுவர்கள். என் பாடல் முதற் பரிசிலுக்குரியதெனத் தேர்ந்தெடுக்கப் பட்டது. 1954 ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசிலுக்குரியதென முடியரசன் கவிதைகள் முதல் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது வன உலகம் சுற்றிய தமிழர் சோம.லெ.நம் தமிழண்ணலுக்கு மடல் எழுதியிருந்தார். ஆனால் பரிசு கிடைத்திலது. எனக்கு மிகவும் வேண்டியவர் முயற்சியால் தடுக்கப்பட்டு விட்டது. முடியரசன் ஒரு தி.மு.க. அதனால் அவருக்குப் பரிசில் கொடுக்க வேண்டாம்' என்று எனக்கு வேண்டியவர் கூறினார். நடுவராக இருந்த ஆங்கிலப் பேராசிரியர்சாமிநாதன் என்பார், பரிசு கொடுப்பது கட்சிக்காகவா? கவிதைக்காகவா? என மறுமொழி கூறினார். நெடுநேரம் சொற்போர் நடந்து, அந்த ஆண்டு எவருக்கும் பரிசு கொடுக்கப்படாமற் போயிற்று. ஆங்கிலப் பேராசிரியர் சாமிநாதன், என் நூலுக்கு ஏன் பரிசில் கொடுக்க வேண்டும் என்பதற்கு அவர் எழுதிய குறிப்பு முடியரசன் கருத்து டென்னிசன் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதுதான். பின்னர் இரண்டு தொகுதிகளும் சேர்த்து ஒரே தொகுதியாகப் பாரி நிலையம் வெளியிட்டது. அந் நூலுக்கு 1966 ஆம் ஆண்டு முதற் பரிசில் கிடைத்தது. முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் தாம் பரிசில் வழங்கியவர். தமிழ் வளர்ச்சிக் கழக அறிக்கைகளில்