பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 60 == கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நான் பரிசிலுக்குரியவன் எனக்குறிப்பிடப்படவில்லை. முடியரசன் கவிதைகள்' ஆசிரியர் தமிழண்ணல் என்றே குறிப்பிடப்பட்டது. வானொலியிலும் தமிழண்ணல் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. நல்ல வேளை காசோலை மட்டும் எனக்கு வழங்கப்பட்டது! பரிசு பெற்று இறங்கி வரும்போது, ஒரு முதியவர் என்னை நோக்கி, உங்கள் பாடல்கள் நன்றாகவுள்ளன. காப்பியம் எழுதத்தக்க ஆற்றல் உங்களிடம் உண்டு என்ற குறிப்பு, அப்பாடல்களால் தெரிகின்றது. நல்ல காப்பியமொன்று எழுதுங்களேன். நான்தான் உங்களுக்குப் பரிசில் கொடுத்தேன்' என்று பாராட்டினார். அடுத்துப் பேராசிரியர் ஒருவரும் பாராட்டு மொழிந்தார். இருவரும் யாரென அறியேன். அருகிலிருந்த பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் 'அம்முதியவர் ரா.பூரீதேசிகன், மற்றவர் க.பெருமாள், அவ்விருவரும் இப்போட்டியின் நடுவர்கள் என்றார். 1973ஆம் ஆண்டு, 'வீரகாவியம்’ என்னும் நூல் தமிழக அரசின் இரண்டாம் பரிசு பெற்றது. என்னிடம் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் முயற்சியால் அந்நூல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டது. என் நூலொன்று 'சாகித்திய அகாதெமி'யின் பரிசிலுக் குரியதெனத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகப் பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு, நண்பர் தமிழண்ணலுக்கு மடல் எழுதி யிருந்தார். ஆனால் வானொலியில் வேறுபெயர் அறிவிக்கப்பட்டது. பேராசிரியர் என்ன இப்படி மாறியிருக்கிறதே? என்று நடுவர் தலைவரை வினவ,அவர் நம்ம முடியரசனுக்கு வேறு பரிசில்கள் எவ்வளவோ கிடைக்கலாம். அதனால் மாற்றி விட்டேன்' என்று பெருந் தன்மையுடன் கூறியிருக்கிறார். இவரும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாக எழுதலா மென எண்ணி, காரைக்குடிக் கம்பனடிப்பொடி சா.கணேசனை அணுகிச்சில செய்திகள் வேண்டினேன். எவ்வெந்நூல்கள் அதற்குப் பயன்படும் என்று, சில நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். ‘என்ன முடியரசன்! உங்கள் கவிதையிலே குருதேவர் மயங்கிப் போயிருக்கிறாரே! என்று வியந்தார். (தெ.பொ.மீ.யைக் குரு தேவர் என்பது வழக்கம்) எனக்கென்ன தெரியும்? என் கவிதையில் மயங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என வினவினேன்.