பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் [161] "ஞான பீடப் பரிசுக்காக குரு தேவரும் நீதிபதி மகராசனும் உங்கள் கவிதைக்குப்பரிந்துரை செய்தனர். அப்பொழுது தெரிந்து கொண்டேன் தெ.பொ. மீ யின் ஈடுபாட்டை' என்று மறுமொழி தந்தார். மகிழ்ச்சி யென்றேன். அவர்கள் பரிந்துரைத் தனர். நான்தான் வேண்டாமென்று சொல்லி விட்டேன்' என்றார் கம்பன் அடிப்பொடி . என்னுள் தோன்றிய மகிழ்ச்சி, அரும்பிய அப்பொழுதே வாடி வதங்கி உதிர்ந்து விட்டது. வேண்டாம் என்பதற்கு என்ன காரணம் கூறினர்கள்? என்றேன். இன்னுங் கொஞ்சம் தரம் உயரட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று சொன்னேன்' என்றார். அவர் கருதிய 'தரம் எத்தகையது என இன்னும் எனக்கு விளங்க வில்லை! கம்பர் விழாவின் பொருட்டுக் காரைக்குடிக்கு வந்திருந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்களும் நானும் நாட்டரசன் கோட்டைக்கு அவர் வண்டியிற் சென்று கொண்டிருக்கும் பொழுது, 'இந்த ஆண்டு ஞான பீடப் பரிசிலுக்கு உங்கள் நூலைப் பரிந்துரைத் திருக்கிறேன்' என்றார். எந்த அன்பர் முயன்றாரோ தெரியவில்லை: அதுவும் நின்றது. தமிழக அரசின் பாவேந்தர். பரிசுக்கும் முதலிலேயே என் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, என் நண்பர் சாமி பழனியப்பனால் நிறுத்தப் பட்டது. அவரே இதை என்னிடம் கூறினார். காரணம் வினவினேன். "சீனியாரிட்டி' என்றார். அப்பொழுது பரிசில் பெற்றவரினும் நான்தான் மூத்தவன். நான்பனியிலிருந்ததால் 'இளைஞன் எனக் கருதி விட்டார். நிலைமை தெரியாமல் நடந்து விட்ட தவறு. மீண்டும் என் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டு, உரிய இடத்திற்குச் சென்றது. ஆனால்........? தமிழ் நாட்டில் ஓரிலக்கம் பரிசில் (இராசஇராசன் விருது) தரும் பல்கலைக் கழகம் ஒன்றில் தட்டச்சு செய்யப்பட்ட தாளில் என் பெயர் இருந்ததாகப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். பின்னர், பல்கலைக் கழகம் அனைத்துக்கும் தொடர்புடைய அலுவலர் ஒருவர் காரைக்குடிக்கு வந்திருந்த பொழுது, அவரும் இச்செய்தியைக் கூறினார். ஆனால் வல்லான் வகுத்த வாய்க்காலில் அந்தத் தாள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. (1990 ஆம் ஆண்டு)