பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 | கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இவ்வாறு பல்வேறு நிலைகளில் எனது நூல் தேர்ந்தெடுக்கப் படினும் எனக்கு வேண்டியவர்களாலேயே தடைசெய்யப்பட்டது ஒரு தனிச் சிறப்புத்தானே! 30-4-1966இல் பறம்பு மலையில் நடந்த பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார். 'கவியரசு" என விருது வழங்கிப் பொன்னாடை போர்த்து, உரூபா.நூற்றொன்றும் வழங்கிச் சிறப் பளித்தார். முதல் விருது பெறும் பேறு எனக்குக் கிடைத்தது. இங்கே ஒரு வேடிக்கை நடந்தது. பறம்பு மலைக்குச் சென்ற வுடன் அங்கிருந்த சாமி. பழநியப்பன், கவிதை வடிவில் நான் நன்றி கூற வேண்டும் எனக் கூறினார். உடனே அவரிடமே தாளொன்று பெற்றுக் கோவில் வாயிலில் இருந்த வேப்பமரத் தடியில் அமர்ந்து பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். மரத்தின் அருகிலிருந்த மண்டபத் துள்ளிருந்து சீறும் முழக்கமொன்று கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். கோழியைக் கண்டு அஞ்சிய யானையின் பிளிறல் அது. யானையைக் கண்டபின் எனக்குக் கவிதையாவரும்? எழுதிக் கொண்டிருந்ததர்ள் பறக்க அமர்ந் திருந்தஎன் தாள்களும் (கால்கள்) பறந்தன. நான் நன்றி கூறும் பொழுது, அடிகள் அறம் வேறு: என் அறம்' வேறு. அவர் கடவுள் அடியார் நான் அக்கொள்கையில் கருத்து வேறுபாடுடையவன். அவர் நெற்றியில் திருநீறு பொலியும்; என் நெற்றியோ அவ்வாறன்று. எனினும் என்னையழைத்து, கவியரசு" என முதல் விருது தந்து பெருமைப்படுத்தினார் என்றால், என்ன காரணம்? அவர்தம் நெஞ்சிலும் என் நெஞ்சிலும் நிலைத்திருக்கும் தமிழ்தான் அதற்குக்காரணம். தமிழால் ஒன்றுபடின் தமிழர்க்குள் வேறுபாடு ஏது? என்றேன். மேலும் கவியரசு' என்றால் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை ஒருவரைத்தான் குறிக்கும். அப்படி, அவருக்கு இயற்பெயர் போலாகி விட்டது. அப்பெருமகனார் பெயர் எனக்குச்சூட்டப் பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பட்டத்தையே வெறுக்கிறேன் என்று கருதி விடுதல் வேண்டா. அத்தகு துறவுள்ளம் உடையவனல்லன். வேறு பெயர் வழங்கியிருக்கலாம் என்றேன். விருது வழங்குவது எங்கள் விருப்பத் தைப் பொறுத்தது என அடிகளார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். கவிதைப்பணிக்குக் கிடைத்த பரிசு இது.