பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நானெழுந்து, என்னை ஏழை என்றா எண்ணி விட்டீர்கள்? என்னைக் காணுங்கால் அவ்வாறா தோன்றுகிறது? என் நெஞ்சில் தம்ழ் இருக்கும் வரை நான் ஏழையல்லன். அதனால் பணம் அனுப்புதல் வேண்டா, தேவைப்படின் நானே வாங்கிக் கொள்ளு வேன். வாங்கிக் கொள்வேன் என்பதை விட வந்து எடுத்துக் கொள்வேன் என்று உணர்ச்சி வயப்பட்டுக் கண்கலங்கிப் பேசினேன். ஒட்டுநர் முதல் பலரும் அழுது விட்டனர். பெங்களுரிலுள்ள உலகத் தமிழ்க் கழகத்தினர், என்னை யன்முத்துப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துப் பணம் வைத்த சந்தனப் பேழையும் வழங்கிச் சிறப்பித்தனர். அங்கே தமிழ்ச்சங்கம் கண்ட சுப்பிரமணியனார், பேராசியர் கு.பூங்காவனம், செல்வம், மனோன்மணி - இவர்கள் காட்டிய அன்பு என்றும் நினைத்தற் குரியது. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தம் தூண்டுதல்தான் காரணமெனப் பின்பு அறிந்து மகிழ்ந்தேன். தமிழகமெங்கணும் பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்டது. சிவகங்கையில் கவிஞர் மீரா, அவ்விழாவை மூன்று நாள் சிறப்பாகக் கொண்டாடினார். ஒரு பெருங்கவிஞருடைய நூற்றாண்டு விழாவில் உயிருள்ள ஒரு கவிஞருக்குச் சிறப்புச் செய்ய வேண்டு மென்ற நோக்கில், என்னையழைத்து, குன்றக்குடி அடிகளா! தலைமையில் ஆயிரம் வெண்பொன் நல்கினார். s கோயிற்பட்டியில், திருவள்ளுவர் மன்றம்' என்னும் பெயரி மன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பேராசிரியர் சங்கர வள் நாயகம் தலைவராகவும் புலவர் படிக்கராமு செயலாளராகவும் இருந்து, செவ்வையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்து வருகின்றனர். திங்கள் தோறும் தமிழுக்குப் புதுமை படைத்து வருகின்றனர். இவர்தம் பணியைச் சான்றோர் பலரும் புகழக் கேட்டு மகிழ் துளேன். 1979ஆம் ஆண்டு, தற்கால நூல்களின் திறனாய்வு என்று தலைப்பில், திங்கள் தோறும் பேராசிரியர் பலரைக் கொண்டு திறனாய்வு செய்தனர். அவ்வரிசையில் பூங்கொடி என்ற என் கர்ப்பியமும் 26-8-79 பேராசிரியர் வளனரசு என்பவரால் திறனாய்வுட் பொழிவு நிகழ்த்தப்பட்டது.