பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 1.65 1987ஆம் ஆண்டு ஒரு புதுமை செய்தனர். உலவும் பாவலர் களின் உலவாப்படைப்புகள் என்ற தலைப்பில் திங்கள் தோறும் நூல்கள் மக்கள் முன் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் பொழுது, நூலாசிரியரை வரவழைத்துப் பாராட்டும் செய்வர். இவ்வரிசையில் என் வீரகாவியம் என்ற நூல் 22-2-87இல் அவையில் பேராசிரியர் சங்கர வள்ளி நாயகம் அவர்களால் ஆய்வுப் பொழிவாற்றப் பட்டது. சென்னையில் தி.மு.கழகம் செப்தம்பரில் முப்பெரும் விழா நடத்துவது வழக்கம். அவ்விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது என்னும் விருதுகள் மூவர்க்கு வழங்கப்படும். 16-9-1988 இல் நிகழ்ந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருது எனக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினைக் கலைஞர் வழங்கினார். விருது அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. வி.பி.சிங், சுர்சித்சிங் பர்னாலா மற்றும் வடமாநிலத் தலைவர்கள் வாழ்த்தினர். தலைமைக் கழகச் சார்பில் சால்வை போத்தப்பட்டது. ஆந்திர முதல்வர் என். டி. இராமராவ் அவர்கள் தமது சார்பில் பொன்னாடை போர்த்தினார். 1989 சனவரியில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாகை சூடியது, பிப்ரவரியில் கலைஞர் முதல்வரானார். ஏப்ரல் 29ஆம் நாள், பாவேந்தர் விழா அரசின் சார்பிற் கொண்டாடப் பட்டது. 1987ஆம் ஆண்டுக்குரிய பாவேந்தர் விருது எனக்கு வழங்கப்பட்டது. மாண்புமிகு கல்வியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் தலைமையில், கலைவாணர் அரங்கில் மாண்பு மிகு முதல்வர் கலைஞர் அவர்கள், எனக்குப் பொன்னாடை போர்த்து பொற்பதக்கம் அணிவித்து, பத்தாயிரம் உருவாவும் வழங்கிச் சிறப்பித்தார் தகுதியுரை என்ற தலைப்பில் பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. என் நூல்கள், பாக்கள் பலரால் மடல் வாயிலாகப் பாராட்டப் பட்ட பகுதிகளிற் சிலவற்றைத் தொகுத்து தருவது நன்றெனக் கருதுகின்றேன். பாடல் வடிவிலும் உரைநடை வடிவிலும் பாராட்டுகள் வந்தன. கைக்குக் கிடைத்தவற்றிலிருந்து சில தரப்படு கின்றன. பலர் பாராட்டியிருப்பினும் மாணவர் சிலர் பாராட்டிய வற்றை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் எழுத்து இளமுள்ளங் களையும் தொட்டு, அவர்களுக்கு உணர்வும் மகிழ்வும் ஊட்டியது,