பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பற்றியும் பல கருத்துகளையும் பல நிலைகளில் சொல்லியிருக் கிறார். ' இன்று அக்கருத்துகள் எந்த அளவு நிலை பெற்றுள்ளன என்பதை நினைக்கும் போது, அவர் தொலைநோக்கு எவ்வளவு உயர்ந்தது என்பதை நான் எண்ணி வியப்பதுண்டு. தங்கள் கவிதையொன்றைப் பொன்னி’ இதழில் படித்த பாவேந்தர் இது நல்லா இருக்குது. எனக்குப் பிறகு இவன்தான் கவிஞன் என்றும், பிறிதொரு சமயம் தங்களின் மற்றொரு கவிதை யைப் படித்த பாவேந்தர், இலக்கணத்தோடு ஒழுங்கா எழுதணும்; இதைச் செய்திருக்கிறது நம்ப முடியரசன் தாம்பா என்றும் பாராட்டினார்’ -மா. தண்டாபனி, 28-4-88 எனக்குத் தமிழறிவுறுத்திய - வணக்கத்திற்குரிய - ஆசிரியப் பெருந்தகை மீ. முத்துசாமிப் புலவர் பூங்கொடி வெளியீட்டு விழாவிற்காகத் திருவுளங்கொண்டு எழுதியருளியவை. 'கவிஞர் முடியரசன் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். புலமை நலத்திற் கேற்ற குண நலம் சான்றவர். இவர் பழைய மரபுகளைத் தழுவியும் புதிய மரபுகளைப் போற்றியும் கவிதைகள் செய்யும் திறனுடையவர். இவர் கவிதைகள் அனைத்தும் செவ்விய இனிய செந்தமிழ்ச் சொற்களால் ஆக்கப் பெற்றவை. விழுமிய பல்வேறு வகையவாய பொருள்களைக் கொண்டவை. இம்மியள வேனும் இலக்கண நெறியை இகந்து செல்லாதவை. சொன்னலம் பொருள் நலங்களால் கற்போருக்குக் கழிபேருவகை பயப்பவை. இத்தகைய கவிதைகளால் இவர், தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டுதற்கு உரியராயது வியப்பன்று மீ.முத்துசாமி பிள்ளை, அண்ணாமலை நகர் தமிழ் விரிவுரையாளர். 10. I2. I 964. அண்ணாமலைப்பல்கலைக்கழகம். ஆ. .க. க் ** ** **