பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 169 தாத்தா, தமிழ் நெறித் காவலர் மயிலை, சிவமுத்து அவர்கள் 'முடியரசன் கவிதைகள்’ என்னும் நூலைப் பாராட்டி எட்டுப் பக்கங்கள் எழுதியுள்ளார். சில பகுதிகள் மட்டும் இங்கே தரப்படு Խ.), ன்ற இர. “பாரதிதாசனார் பரம்பரையில் வந்த கவிஞர் வாணிதாசன் அவர்களைத் தமிழ் நாட்டுத் தாகூர்' என எழிலோவியத்தில் யானே முன்னர் மொழிந்துள்ளேன். இப்போது அதே நிலையில் கவிஞர் முடியரசன் அவர்களையும் பாராட்டுங் கடப்பாடுடையேன். கவிஞர், அழகமைந்த இடங்களையும் அழகு கெட்ட இடங் களையுஞ் சுட்டிக் காட்டி, நாட்டுப் பற்றுாட்டிப் புத்தம் புதிய அழகிய உவமைகளையும் அழகின் சிரிப்பில் அளித்துள்ளார். நீயும் உன்றன் அனைமொழியால் பேசு! பாடு! தடுப்பவர் யார்?' என உரிமையும் உறுதியும் உள்ளத் திண்மையும் மளட்டுகிறார் உயர் கவிஞர். பொதுவுடைமை ஆட்சி புரியும் புது உலகம் காண முழு மதியர் ஆட்சி வேண்டும் இவர், களங்கம் உன்பால் இருக்கின்றதென ஒருவன் இயம்பினானே' என்பதிலும், 'மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று' என்பதிலும் சொல்லழகு, பொருளழகு நிறைந்து நிலவு ஒளி வீசுகிறது. காப்பளித்துக் காப்பளித்தாய்' என்பதில் சொல் நயத்தையா காண்பர் அறிவுடையோர்? வாழ்க்கைப் படமன்றோ அச்சொற் களில் பிடிக்கப்பட்டுள்ளது? 'உன்னுருவே தோன்றுதடி" என்பதில் எங்கெங்குக் காணினும் சக்தியாடா என்ற சாயல் படிந்து, பாரதிதாசன் பாதையில் ஏறெனச் செல்கிறார். கோழை மன அச்சத்தார் முட்புதராய் அதனடுவே கனியானாள், என விதவை நிலைக்கிரங்கி, விதவை யெனும் கொச்சை மொழி இல்லாமற் செய்திடுவேன் என்றுறுதி கொள்ளச் செய்கிறார்.