பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 9 | ஆகவே முடியரசன் அவர் களுக்கு நாட்டின் புதிய தேவைகளை ம ணர்ந்து புதுமைக்கலை - இலக்கியத்துக்குத் தன் பணிகளைப் புரிவதற்குக் காலம் விரிந்து கிடக்கிறது. கவிஞர் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டு மென்பது எனது பணிவன்பான வேண்டுகோள்) -தாமரை சோபகிருது - தை 1964 4. _ _4 ** ** ** 'இளந்தமிழன்’ எனும் இதழில் செ.பக்தவத்சலம் என்பார். 'முடியரசன் கவிதை முத்துக்கள்' என்னுந் தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 'குவலயமெங்கும் குடியரசு கோலோச்சும் இந்நாளில், கவியரசு முடியரசன் என்ற பட்டமும் புனைபெயரும் பூண்ட பைந்தமிழ்க் கவிஞரின் கவிதைகள் உருண்டு திரண்டு ஒளி வீசும் ஒரு பெரும் முத்துக் குவியலாகவே காட்சி தருகின்றன. இக்காலத்தில் இயற்கை முத்துக்களின் அருமையை அறிய வொட்டாமல் செயற்கை முத்துக்கள் மலிவாகக் கடைகளில் கிடைக்கின்றன! ஒரு சிறிய முத்துக்காக வீண் சிரமப்படு வானேன்' என்பதைப் போல, போலி முத்துக்கள் ஒரு புது நாகரிக மலைப் பையே கூட மனத்தில் தோற்றுவிக்கின்றன. இன்றைய தமிழ்க் கவிதை உலகின் நிலையும் இதுதான். இதில் தம் பெயரிலுள்ள பழமையைப் போலவே தம் கவிதைகளிலும் மரபைக் கட்டிக் காக்கும் கவிஞர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் முடியரசன். 'பொன்னி' என்னும் தன்னிகரற்ற இலக்கியத் திங்களிதழில் தான் கவிஞர் முடியரசனும் 'பாரதிதாசன் பரம்பரை'யினராக முதன்முதல் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்விக்கப் பெற்றார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போலவே தனித்தமிழில் இனித்த கொள்கைகளை எடுத்துரைத்தல், இசைத் தமிழை இயன்றவரை வளர்த்தல், காவியங்கள் இயற்றல் ஆகிய முத்துறைகளிலும் முனைந்து மேலும் வெற்றி பெற்றுள்ளார் முடியரசன். *