பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 முடியரசனின் இலக்கண அமைதி நிறைந்த கவிதைகள் திரு.வி.கவின் தெள்ளிய நடையைப் போல் விழுமிய புலயை கெழுமிய ஒரு வகை மிடுக்குடன் மிளிர்கின்றன. தம் பாட்டுத்திறம் முழுவதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காகச் செலவிடும் இச்சுயமரியாதைக் கவிஞரை, காரைக்குடியில் தொடர்ந்து கம்பன் விழா நடத்திப் பெருமை பெறும் திரு.சா.கணேசன் அவர்கள், கம்ப ராமாயணக் கவியரங்கிலும் அடிக்கடி அழைத்துப் பங்கேற்கச் செய்துள்ளார். தி.மு.க.வினரிடையே கம்பனின் இலக்கிய நயங்காட்டுங் கவிஞராகவும் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போரி டையே முன்னேற்றக் கருத்துகளை முழங்கும் திறம் கொண்ட கவிஞராகவும் விளங்கி இருதிறத்துப் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றுள்ள உயர்கவிஞர் முடியரசன். - முடியரசனின் முதிர்ந்த கவிச்சுவையின் பயனாகப் பிறந்துள்ளது. 'வீரகாவியம். இந்நூல் சொன்னலமும் பொருள் நயமும் இன்ன பல பன்னலமுங் கொண்டு, கன்னலென இனிக்கும் கற்கண்டுக் கவிதைகளின் சொற்கண்டாய்த் திகழ்கிறது. 'பெற்றமகன் தளிருடலைப் பஞ்சின் மென்மை பெற்றிருக்கும் கைவிரலால் பூப்போல் தொட்டுக் கற்றுணர்ந்த சான்றோரின் பாடலுக்குள் கரந்திருக்கும் உட்பொருளை உணர்ந்தார்போல மகிழ்ச்சி யுற்றுச் சொக்கிக் கிடக்கும் பெற்ற மனத்தின் பெற்றியினைப் பாடுங் கவிஞரின் நற்றமிழைக் கண்களில் ஒற்றிப்போற்றி கற்றிடுவோம்.' - - இளந்தமிழன் மே - 1973 1966 - 67இல் வெளிவந்த ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி (திருப்பத்துரர்) ஆண்டு மலரில் முனைவர் இரா. இராச கோபாலன் என்பவர் மறுபடி பிறந்த மணிமேகலை’ என்ற தலைப்பில் பூங்கொடி பற்றி எழுதிய கட்டுரையில் சில பகுதிகள்: