பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 193 முடியரசனைத் தெரியாதவர் தமிழகத்தில் இருக்க முடியுமா? இன்றைய கவிஞர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய முன்னணிக் கவிஞர்களில் - நடுநாயகமானவர். சமுதாயச் சிந்தனை, முற் போக்கில் முனைப்பு, இயல்பாக இதயத்தோடு துடிக்கும் தமிழ் ஆர்வம், அமைதியான - ஆனால் நிலை பேறுடைய செயல் வன்மை - இவைதாம் கவிஞர் முடியரசன்.' சங்ககாலப் பாடல்களின் பெருமிதமும் தூய்மையும் தன்மை நவிற்சியும் முடியரசன் பாடல்களில் காணப்படும் தனிச்சிறப்பு. அவர் நிறைந்த சொல் வளம் படைத்தவர். பிற கவிஞர்களைக் காட்டிலும் சொற்களை அளவோடு ஏற்ற இடத்தில் ஆளும் ஆற்றல் படைத்தவர். இத்தகைய இன்கவிஞர் இயற்றிய நன்முறைக் காப்பியமே பூங்கொடி. மொழிக்கொரு காப்பியமாக காப்பிய அமைதியோடு புதுவது புனைந்த பொற்புடன் பூங்கொடி வந்துள்ளது. கண்ணியம், கடமை, கட்டுப்பாடு, என்ற மூன்று பண்புகளின் வடிவம்தான் பூங்கொடி, தமிழ்மீது கொண்ட அன்பை பூசை நேரத்தில் புரியும் அருச்சனையாகவோ, மேடை நேரத்தில் முழங்கும் கூக்குரலாகவோ இல்லாமல் அமைதியான ஆனால் ஒய்வின்றி இறுதிமூச்சு வரை ஆக்கப் பணிபுரியும் இலக்கியத் திருவுருவம் பூங்கொடி இத்தகைய காப்பியத்தை இயற்றிச் சிறந்த துணிவினைக் காட்டியுள்ளார் கவிஞர் முடியரசன். இன்னும் பல இதனினும் சிறந்த காப்பியங்களை இயற்ற விருக்கும் தம் எழுத்தாண்மைக்கு, இதன் மூலம் கொடி உயர்த்தி யுள்ளார் கவிஞர் முடியரசன் என்று நாம் நம்பி மகிழ்கிறோம். கதையில் வரும் பலரும் நூற்றுக்கு நூறு நல்லவராக இருப்பது மானிட இயற்கையில்லை என்பது உண்மையே. ஆனால் மானிட இயற்கை என்ற பெயரால் அருவருக்கத்தக்க காட்சிகளைச் சிறுகதையிலும் புதினத்திலும் படித்துப் |ண்படும் நெஞ்சிற்கு இந்தத் துய நறுமணமலர்களை அள்ளியள்ளி நுகர்ந்து ஆறுதல் பெற முடிகிறது. பரந்து கிடக்கும் உலகமெலாம் தமிழர் விரிந்து உலா வர வேண்டும். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவும், திறமையான புலமையால் வெளிநாட்டாரை வணக்கவும்,