பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்க்கவும் வேண்டும். அந்தப் பணிகள் பூங்கொடியில் செவ்வனே அரும்பி எழில் காட்டுகின்றன. பூங்கொடி பல தேயங்கட்குச் சென்று ஆங்காங்குள்ள தமிழறிஞரோடு சொல்லாடுகிறாள். சான்மார் கமீல்சுவல பெல் ரூதின் அவருள் தலையாயவர். தமிழ்காக்கக் கல்லடிபட்டு, சொல்லடி ஏற்றும் வெஞ்சிறையுற்றும், வேதனைப் பட்டும் வீரம் விளைக்கும் உரவோர் பலர் இந்நூலில் வருகின்றனர். மீனவன், வடிவேல், முத்தக்கூத்தன் முதலிய மொய்ம் பினரின் செயல்கள், நம் கண்முன் எழுந்து மடிந்த நற்றமிழ் வீரரை நினைவுபடுத்துகின்றன. மறியல், உண்ணாமை அறப் போர், சிறைபுகல் முதலிய துணிவினைகளும் நாம் கண்டு கேட்டு மெய்சிலிர்த்த காட்சிகளின் ஒவியங்களே. ஆசிரியர் முடியரசன், இயற்கையும் செயற்கையுமான காட்சிகளில் எல்லாம் புதிய உவமைகளை உருவாக்கியுள்ளார். கதிரவன் உதயம் செய்கின்றான். உவமையும் உதயமாகின்றன. ‘கொடும்பரின் ஆட்சி நெடும்பகல் நில்லாது மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் படும்படும் அந்தக் கெடும்பரின் ஆட்சி உயிர்வரின் உக்குறள் ஓடுதல் போலக் கதிர்வர வறிந்து காரிருள் ஒடிப் பதுங்கி மறைந்தது. பகலவன் வளர்ந்தான்’ இப்பகுதியில் படும்படும்’ என்ற அடுக்கு மொழியின் அழுத்தம், ஆசிரியர் வரும் பொருள் உரைக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று காட்டுகிறது. 'யாதும் ஊரே என்றால் தனக்கென விடும் வேண்டாவா என்று வாதிடுகிறாள். தமிழரின் பெருந்தன்மைக்கும் ஏமாளித் தனத்திற்கும் இடையே கோடிட்டுக்காட்டுகிறார். சோறா: மானமா? என்ற அடிப்படைக் கேள்வி எழுந்து, அதற்குரிய விடையும் சோர்வின்றி விளக்கம் பெறுகின்றது. பல மொழி பயில்கிறாள் பூங்கொடி. பல மொழியும் படிக்க ஆர்வம் எழுப்புகிறாள். ஆனால் அதே நேரத்தில்