பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 20 | ‘என்னைப் பழிப்பவனை - நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனை - பகையா உள்ளம் நினைக்குதம்மா." இதுபோல உயிர்க்கு நேரான தமிழ் மொழியை எண்ணி எழுதப்பட்டிருக்கும் பாடல்கள் படிப்போர் மனத்தைப் பெரிதும் கவர்கின்றன. - 16-10-55இல் வெளிவந்த திராவிட நாடு இதழ், தோழர் முடியரசன் அவர்களின் அருமையான பாடல்கள் அடங்கிய மால். பாடுவதற்கேற்ற கருத்துள்ள நல்ல பாடல்கள் உள்ளன என்று எழுதியது. 1956 பிப்பிரவரியில் வெளிவந்த சாந்தி என்ற இதழ் ஏந்தி வந்த 1ாககுதல: 'பெரும்பாலும் பழங்கால மன்னர் பெருமையைத் தற்காலத் தமிழர் சிறுமையோடு ஒப்பிட்டு மனம் வெதும்புகிறார் கவிஞர் ( ம்) இமயம் வென்றானே - இன்று ஏற்றங் குறைந்தானே' பழந் தமிழர் பண்பாடு அனைத்தும் மூவேந்தர் படைப்பு என்பது கவிஞர் கருத்துப் போலும்.......? மூவேந்தர் ஆட்சிக் காலத்தையும் அவர்கள் காலத்துச் சமூக அமைப்பையும் கவிஞர் மறுபடியும் வருந்தி அழைக்கிறார். வரலாற்றுப்பெருமையிலே மூழ்கி நமது சகோதர மொழி பேசும் மக்கள் மீது குரோதத்தைக் கிளப்புகிறார்..... உழைப்பின் உயர்வைப் போற்றும் பழம் புலவர் பரம்பரை இக்கவிஞருக்கு இல்லை. கவிதையின் உருவமும் மிக மிகச் சாதாரணம். 'கலைமன்றம்’ என்னும் ஏடு குறிப்பிடுவதாவது. உயிருள்ள கவிதை நூல், ஆசிரியர் தமிழன்னையைக் காவியப் பாவையாக்கி, வாழ்வு நெறிக்குரிய அனைத்தையும் பகுதி களிட்டுப் பிரித்து, இனிய சொற்களால் கவிதை களாக்கித் தரும் காவியப் பாவை ஒரு வழி நூலாகும்.'