பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 | கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 'கவிதை' என்னும் ஏட்டின் 1-12-71 இதழில், பண்ணரசன் என்பார்முடியரசனின்இயற்கைஎன்றதலைப்பில்எழுதியகட்டுரையின் பகுதி: 'கற்பனையில் மிக்கவராய்க் காலத்தை வென்ற பாரதியின் வழிவந்தவராய் வாழையடி வாழையென விளங்கி, கனியிடைச் சுளையெனக் கவியாக்கும் ஆற்றல் பெற்று விளங்குபவர் கவிஞர் முடியரசன், பாவேந்தர் அடியொற்றிப் பாடுவதில் மிக வல்லவர். இயற்கையினைச் சுவைப்பதில் ஈடு இணையற்றவர். இவரின் கவிவளத்தை எல்லாம் தெரிந்திடற்கு நிறையப் படியுங்கள் என யானும் கூறிடுதல் இனிக்கின்ற கற்கண்டை, இன்கரும்பை, சுவைத்தேனைச் சுவைப்பதற்கு வாருங்கள் என்பது போலாகிவிடும். பாரதியின் புரட்சி உரு, பாவேந்தர் பீடு நடை, தேவியவர் உள்ளம்போலத் தெளிந்த உயரறிவு இத்தனையும் மொத்தமென இன்றுள்ளார் முடியரசன்' - பண்ணரசன். 4. _ _4 *్మ• •్మ• •్మ* 'காவியப்பாவை’ என்னும் என் இசைப்பாடற்றொகுதி பற்றி இதழ்களின் மதிப்பீடுகளிற் சில: 7-10-55 முரசொலி எழுதிய மதிப்பீடு; தோழர் முடியரசன் பாரதிதாசனுக்குப்பின் தோன்றிய கவிஞர்களில் முன் வரிசையில் நிற்போரில் முக்கியமானவர். அவரது காவியப்பாவை’ என்னும் சமீபத்துக்கவிதைத் தொகுப்பு சர்க்கரைப் பொங்கலென இனிக்கிறது. 'பாடுவதென்றால் தமிழினில் பாடு வணக்க மென்று சொன்னால் வாய் நோகுமோ போன்ற கவிதைகள் இசையோடு பாடும்போது பேரின்பம் தரும் வகையில் அமைந்திருக்கின்றன. 'தென்றல் ஏடு 15-10-55இல் எழுதிய மதிப்புரை இதோ, தென்மொழியாம் தேன்மொழியின் தமிழ் மொழியின் சிறப்பையும் மேம்பாட்டையும் மறுப்போர்க்கு - மறந்தோர்க்கு நினைவூட்டும் மலர்க் கொத்து இந்த நூல் (காவியப்பாவை) நல்ல நல்ல பாடல்கள் நம் நெஞ்சைத் தொடும் பாடல்கள் நூலில் நிறைந்து காணப்படுகின்றன.