பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 199 கவிஞரின் கற்பனைத்திறனும் பொருளாதாரக் கொள்கையும் இவற்றால் புலனாகின்றன. கருத்துக்கள் காலப்போக்குக்கு ஏற்ற து lெ LTதி உஇT. தமிழ்த் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர் அமைச்சர் ஆகியோரிடம் முன்னுரை வாங்குவோர் சிலர். பிறருடைய நூல்களைச் சிறிது புரட்டிப் பார்க்க ஒய்வு நேரமோ விருப்பமோ இல்லாத பேரறிஞர்களிடம் முன்னுரை வாங்குவோர் பலர். இவ்வாறு படிப்பவர்களை ஏமாற்றமுயல்வது இக்கால எழுத்தாளரிடம் பரவியுள்ள புதிய நோயாகும். இவ்வாறின்றி இக்கவிஞர்தம் உடனாசிரியர், இனிய நண்பர் ஒருவருடைய அணிந்துரையைப் பெற்றிருப்பது, இந்நூலுக் கொரு சிறப்பு. தமிழண்ணல் அணிந்துரையைப் படிப்பவர்க்குப் பத்திரிகை மதிப்புரைகள் வெற்றுரைகளே’ - சோம. லெ. 28-7-54 ஆ ஆ 載 *్మ• శ్యతా ** திருச்சி வானொலி நிலையம் 'புத்தக விமர்சனம்’ என்னுந் தலைப்பில் முடியரசன் கவிதைகள்' என்னும் நூல் பற்றி 8-11-54இல் ஒலி பரப்பிய பகுதியில் ஒரு பகுதி:

‘புது உலகத்தை சிருஷ்டிக்க நினைக்கும் இருபதாம் நூற்றாண்டுக் கவிகளில் ஒருவர் முடியரசன். புதருள் கனி'யில் விதவை மறுமணத்தைப் பற்றி இங்கித மாகப் பிரஸ்தாபிக்கிறார். புதுமைப் பெண்ணில் கட்டாயக் கல்யாணத்தை வெறுக் கிறார். "தொழிலாளி' “விறகு வெட்டி", 'குதிரை நினைத்தால்....... 2 முதலிய பாட்டுக்களில் முதலாளித்துவ ஒழிப்பை ஆதரிக்கிறார். இயற்கையை வருணிக்கும் கவிதைகள் அழகின் சிரிப்பு' ஆறு', 'கடல் முதலியவை. உயரிய கவிதை மனம் இவற்றில் வீசுகிறது. கற்பனைகள் ஊற்றுப் பெருக்குப்போல் வருகின்றன. - மகாலிங்க சாஸ்திரி 4. ஆ. ஆ *ృతి ** **