பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 தொழிலாளி என்ற பகுதியில் இன்றைய சமுதாயத்தில் தொழிலாளர் படும் அவதிகள் சிலவற்றைச் சித்திரித்திருக் கிறார். மறைந்த திரு.வி.க அவர்களைப் பற்றிப்பாடும் பாடல் உளமுருக்கும் பாடலாகும். பாடல்கள் சில பயில்வார் உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன - 17-10-1954 - சுதேசமித்திரன் அ.மு.பரமசிவானந்தம் Ημ 4 i. ** ** ** 'எல்லோரும் மானிடராவரோ? இப்புவியில் கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாமோ? என்று என் தந்தையார் அடிக்கடி சொல்வது வழக்கம். அவரிறந்து அனேக ஆண்டுகளாயினும் அதே ஆப்த வாக்கியத்தின் உண்மை, முடியரசன் கவிதைகளை ஒருமுறை வாசித்தபின் என் மனத்தில் உதிக்கிறது. பாட்டுப்பாட்டு என்று பலரும் பாடும் இந்த நாளில், பாங்கான பாடல்களைப் படிப்பது பரமானந்தம் ஆகும். அதிலும் பழமையைத் தழுவியும் புதுமையைப் புகட்டியும் இனிய எளிய நடையில் இயற்றப் பெறும் பாக்கள் எத்துணைப் பேரின்பம் பயக்கு மென்று இங்கு எடுத்துக் கூற வேண்டிய தில்லை. அத்துணைச் சிறந்த பாடல்கள்தாம் முடியரசன் கவிதைகள் என்ற முக்காலுந் துனிந்து கூறலாம்........?? - ஈழகேசரி -8-8-54 暫 暫 輕 ** ** ** 'வாரச் செய்தி ஏடு எழுதிய மதிப்புரையின் பகுதி: 'தலைசிறந்த கவிஞர் சிலர் நீங்கலாக ஏனையோர் இயற்றும் கவிதைகள் ஆவேசப் பாடல்களாகவே உள்ளன. இலக்கணப் பயிற்சி சிறிதுமின்றிப் பாடத் தொடங்குகின்றனர். இலக்கிய அறிவில்லாத ஆசிரியர்கள் இவற்றைத் தம் இதழ்களில் அச்சிட்டு, இலக்கணப் பிழைகள் மலிந்த பாடல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் முடியரசன் கவிதைகள்' வெளி வந்திருக்கிறது. செந்தமிழ்ச் சொற்செறிவும் இலக்கண அமைதியும் இத் தொகுப்பி லுள்ள பாடல்களில் உள்ளன. ஆசிரியருடைய பரந்த உலகியலறிவு, தமிழார்வம், உவமைச் சிறப்பு முதலியன போற்றத் தக்கவை.