பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 207 இக்காப்பியத்தின் பயன் கன்னித் தமிழைக் காக்க ஒரு கன்னியை இழக்கின்றோம். முத்தமிழைக் காக்க ஒரு சித்திரத்தைப் பலியிடுகிறோம். இறந்த கலைகளை உயிர்ப்பிக்கப் பிறந்த ஒரு மகள் உயிர் விடுகிறாள். ஆம்; தன்னல மறுப்பால்தான் தமிழ் வாழும். தன்னல நினைவு உள்ளவரை தமிழை விட்டுக் கொடுக்கத் தான் தோன்றும். தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் காட்டும் ஆர்வம் போதாது. ஆரவார உரைகள் போதா. தன்னல மறுப் பென்னும் நெருப்பினில் மூழ்க வேண்டும் என்று நம்மை யெல்லாம் கூவி அழைக்கின்றாள் பூங்கொடி நல்லாளாகிய நம் டன் பிறப்பாட்டி, தன்னைத் துறந்து தமிழைக்காக்கின்ற செயல் நெறியே இவள் நமக்கு உணர்த்திச் செல்லும் தத்துவ ாகும்" -தமி செந்தமிழ்ச் செல்வி 1965 சனவரி இதழில் வெளியிட்ட குறிப்பு: 'கவிஞர் முடியரசன் அவர்களின் இப்புதிய காப்பியப் படைப்பு தமிழுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் ஒரு சீரிய பணி யாகும். தமிழகத்தின் பெருங்காப்பிய நூல்களுள் ஒன்றாகிய மணிமேகலையைக் கருவூல மாகக் கொண்டு பூங்கொடி என்னும் புது இலக்கியச் செல்வத்தைத் தமிழகத்துக்குத் தந்துள்ளார் நம் கவிஞர். இக்காப்பியத் தலைவி யாகிய பூங்கொடி தமிழகப் பெண்டிர்க்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளாள். இக்காப்பியம் இலக்கிய இலக்கண வளஞ் செறிந்து, உவமை நலத்தால் சிறப்புற்று விளங்குகிறது. ஆ ஆ 暫 ** *్మ* *్మ* 'கவியரங்கில் முடியரசன்' என்னும் கவிதைத் தொகுப்புக்குச் கதேசமித்திரன் எழுதிய மதிப்புரையில் ஒரு பகுதி: கவிதைகள் யாவும் பட்டை தீட்டப் பெற்ற பளிங்குக் கண்ணாடி போலவே பல்வேறு கோணங்களிலும் கவித்துவக் காட்சி தருகின்றன. எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கவிதையிலும்