பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 2 11 இப்பாடலில் 'உயிரென நட்டார் என நண்பர்க்கு மட்டும் அடைமொழி தந்து, பிறர்க்கு அடைமொழி தராது பாடியதி லிருந்தே நட்புக்கு நான் கொடுத்திருந்த மதிப்புப் புலனாகும். நட்புக்கு என்னுளத்தில் எத்தகைய இடமிருந்தது என்பதற்குப் பிறிதொரு சான்றும் கூறுதல் ஏற்புடைத்தாகும். எனக்குத் திருமணமாயிற்று. முதலிரவு நிகழ்தல் வேண்டும். அவ்விரவில் வீட்டில் என்னைக் காணாது தேடுகின்றனர். அவ்வ யம் என் அன்னையார் பள்ளிக்கு முன்னே நிற்கும் மரத்தடியின் கீழுள்ள பலகைக் கல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப் பன். சென்று பாருங்கள்' என்று கூற அவர்களும் அவ்வாறே அங்கே வந்து என்னை இழுத்துச் சென்றனர். காதலைவிட - காதல் மனையாளை விட நண்பர்களையே மிகுதியும் விழைபவன் நான். இன்றும் அப்படியே. கவலையால் மனச்சோர்வுற்றிருக்குங்கால் நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்து ானத்தை ஆற்றிக் கொள்ளுவேன். என் கவலைப் பிணிக்கு ஒர் அருமருந்தாகும் நட்பு. இப்பொழுது பணியிலிருந்து ஒய்வு பெற்றபின்னர் தனிமைத்துயர் பன்னை வாட்டிவதைக்கும். கவலைகளும் என்னைத் தின்னும். கவலைக் கடலுள் ஆழ்ந்து விடுவேன். அப்பொழுதெல்லாம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாவேந்தர் பாடலை எனக்குள் பாடிக் கொள்வேன். “அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்டமாட்டாயா?” பான்றவரிகளைப்பாடும்பொழுதுகடலுள்ளிருந்துசற்றேமேலெழுவேன். 'இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட ம்ாட்டாயா? என்ற வரி வரும்பொழுது மேல்மட்டத்துக்கு வந்துவிடுவேன். குறளிலே ஒரு சொல் என்றவுடன் இடுக்கண் வருங்கால் நகுக பான்ற குறள் நினைவிற்றோன்றும். அவ்வேளையில் நண்பர்கள் என்