பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 எங்கள்பாற் பேரன்பு காட்டி, இல்லத்திற்கு வற்புறுத்தி அழைத்தார். இருவரும் சேலியமேட்டிற்குச் சென்றோம். அன்பாற் பொலிந்த அவர்தான் வாணிதாசன் என அறிமுகமானார். அவர் கவிதை எழுதி வைத்திருந்த கையெழுத்துப்படியை என்னிடம் தந்தார். படித்துப் பார்த்து, இயற்கையழகுகள் அருமை யாகப் புனையப்பட்டுள்ளன எனப் பாராட்டினேன். இதை நீங்களே எடுத்துச்செல்லுங்கள் என்ன செய்யவேண்டுமோ செய்யுங்கள் என்று கொடுத்தார். நர்ன் சென்னைக்கு வந்ததும் ஒரு பாடலை எடுத்தெழுதிப் 'பொன்னி இதழில் வெளியிட அனுப்பினேன். அது பாரதிதாசன் பரம்பரை'யில் வெளியாகியது. அன்று முதல்கவிஞர் வாணிதாசன் எனத் தமிழகத்திற்கு நன்கு அறிமுகமானார். எங்கள் அன்பு நாளுக்கு நாள் வளர்மதியாகியது. உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்? வாங்கி வருகிறேன்' என்று அடிக்கடி மடல் எழுதுவார். நான் ஒன்றும் வேண்டாமென்று எழுதிவிடுவேன். எனினும் அவர் சென்னைக்கு வருங்கால், சட்டைத் துணி வாங்கி வந்து தருவார். பின்னர், அவர் ஆசிரியராக இருந்து கொண்டே தமிழ் வித்துவான் தேர்வுக்குப் பயின்று கொண்டிருந்தார். எனக்கு விடுமுறை என்றால் சேலிய மேட்டிற்கு நான் செல்வேன். அவர்க்கு விடுமுறையென்றால் சென்னைக்கு அவர் வந்துவிடுவார். தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந் தொகை பெரியபுராணம் முதலிய நூல்களைப் பாடஞ் சொன்னேன். எளிதிற் பற்றிக் கொள்ளும் ஆற்றல் அவர்பாலுண்டு. தேர்வில் வெற்றி பெற்று வித்துவான் வாணிதாசன் ஆனார். எனக்கோ அண்ணன் வாணிதாசன் ஆனார். என்னைத் தம்பி என்று ஏற்றுக்கொண்டு ஒருமையில் அழைக்கத் தொடங்கினார். முடியரசன் இன்னும் குழந்தைத் தனமாகவே இருக்கிறான். நாம்தான் பெண் பார்த்து, அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தாத்தா மயிலை. சிவமுத்துவுக்கு வாணியண்ணன் மடல் எழுத, பெண் பார்க்கும் படலம் நடந்தது என்னிடம் நூறு உரூவாவைத் தந்து, முதலில் பெண்ணுக்கு ஏற்பாடு செய்க, அறுவடை முடிந்ததும் திருமணச் செலவுக்குப் பணம் தருகிறேன்' என்று கூறி, என் திருமணத்துக்குக் கால்கோள் செய்தவர் அவரே.