பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 2 I 5 அவர்தம் பேரன்பைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி. வெளியூருக்குச் சொற்பொழிவாற்றச் சென்ற அண்ணன், என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.தில்லை. தமிழாசிரியர் த.முருகேசனாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து தொடர்வண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவாதலின் எனக்கு உறக்கம் வந்துவிட்டது. அண்ணன் தம் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ளுமாறு கூறினார். அவ்வளவு தாயன்பு காட்டுவார். தாயன்பை அவர் பாற் பலமுறை கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நாங்கள் இரட்டைக் கவிஞராகவே அன்று திகழ்ந்தோம். அன்று வரும் பொங்கல் மலர்களில் எங்கள் இருவர் கவிதைகளும் இடம் பெறும். கோவை முத்தமிழ் மாநாட்டில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் நாற்பத்தொன்பதின்மர்கலந்துகொண்டனர். போட்டியில் எங்கள் இருவர் கவிதைகளுக்குத் தான் பரிசிலும் கிடைத்தது. அவர் மறைவுக்குப் பின்னரும் அவர்தம் குடும்பத் தொடர்பு இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணனை நினைதொறும் நினைதொறும் உணர்ச்சி வயப்படுகிறேன். இத்தகைய அன்புடைய அண்ணன் எக்காரணத்தாலோ அவருடைய வரலாற்றுக் குறிப்பில் என் பெயரைச் சுட்டாது விடுத்தனர். அறிஞர் தமிழண்ணல் எனக்குத் திருமணம் ஆகியவுடன் காரைக்குடி மீசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றேன். அங்கே தமிழண்ணலும் (முனைவர். இராம.பெரியகருப்பன்) ஆசிரியராக இருந்தார். கல்லூரியில் பயிலும் நாளிலேயே நாங்கள் தொடர்பு கொண்டிருந்தமையால் பங்கள் நட்பு எளிதிற் பற்றிப் படரத் தொடங்கியது. நட்பின் முதிர்ச்சி, அவரை என் தம்பியாக்கிற்று. கல்லூரியில் நடந்த நாடகமொன்றில் கதைத் தலைவன் கண்ணனாக நான் நடித்தேன். அவர் இளங்கண்ணனாக நடித்தார். . அன்றே நாங்கள் அண்ணன் தம்பிதான். அவர் இன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குகிறார். எனினும் அவரை ஒருமையில் தான் இன்றும் அழைத்து வருகிறேன். அவ்வளவு எளிமையாகப் பழகி வருகிறார்.