பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 8 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 அவர் தம் இல்லம் சமதர்ம விலாசத்தில், திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் வந்து தங்கியுள்ளனர். பேரறிஞர் அண்ணா, கலைஞர், அ. பொன்னம்பலனார். எஸ்.வி. லிங்கம், ஈவிகே. சம்பத்து முதலானோரை அவ்வில்லத்திற் கண்டு மகிழ்ந் துள்ளேன். அவ்வில்லத்தை எங்கள் இயக்கத்தின் புனித இல்லமாகக் கருதி வருகிறேன். அண்ணா மறைந்த செய்தியை வானொலியிற் கேட்டவுடன் அழுது, புலம்பித் திகைத்துப் போன நான் அண்ணன் வீட்டிற்குத் தான் ஒடிச்சென்று ஓவென்று அலறினேன். அண்ணனும் அண்ணியும் என்னை அமைதிப்படுத்தினர். அப்பொழுதே நானும் அண்ணனும் சென்னைக்குச் சென்றோம். இந்நிகழ்ச்சியை அண்ணன் இராம.சுப்பையா அவர்கள் தாம் எழுதிய “நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்” என்னும் நூலில் உருக்கத்துடன் குறிப்பிடுகிறார். “1969 பிப்ரவரி 3ஆம் தேதி காலையிலே (அண்ணா மறைந்தார் என்று) அந்த இடி தலையில் விழுந்தது. அண்ணா இறந்து போயிட்டார்ங்கிற செய்தியைக் கேட்டு நிலை குலைஞ்சு நின்னுக்கிட்டிருந்தப்போ, கதவைத் திறந்துக்கிட்டு, அழுதபடியே உள்ளே வந்தார் கவிஞர் முடியரசன், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தவுடனே 'ஒ' என்று சத்தம் போட்டு அழுதிட்டோம். நானும் அவரும் மட்டுமா? தமிழ் நாடு பூராவும் அன்னிக்கு அழுதது. அன்னிக்கே நானும் முடியரசனும் பஸ்ஸோ லாரியோ பிடிச்சு சென்னைக்கு வந்தோம். கடைசி ஊர்வலத்திலே கலந்துக் கிட்டு கடற்கரையிலே அண்ணாவை விட்டுவிட்டு. அழுத கண்ணோடு ஊருக்குத்திரும்பினோம்” என்னையும் என் குடும்பச் சூழலையும் நன்குனர்ந்தவர் அண்ணன். அதனால் அடிக்கடி என்னைக்காணும்போதெல்லாம், தம் சட்டைப் ைைபயில் கையை விடுவார். ஏழுஉருவா, ஒன்பது உருவா ஐம்பது காசு, ஐந்து உருவாகிடக்கும். அழுத அப்படியே என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். நான் மறுப்பினும் விடார்.