பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 சு.அ.நடராசன் பொதுவுடைமைக் கட்சித் தோழர்.நான் எ கொள்கையில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறேனோ அது போல அவர், பொதுவுடமைக் கொள்கையில் அவ்வளவு உறுதியானவர். இவர் 1948இல் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது மேலைச்சிவபுரித் தமிழ்க் கல்லூரியிற் பயின்று கொண்டிருந்த ந.இராமலிங்கம் என்ற தோழருடன் வந்து தங்கியிருந்தார். அன்று ஏற்பட்ட எங்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து உறவு முறையாகக் கனிந்திருக்கிறது. மைத்துனர் என்ற உறவு முறையிற்றான் பழகி வருகின்றோம். மற்றவர்கள் போல் இவரும் என்னை மதித்துப் பழகினும் சில வேளைகளிற் கண்டித்துப் பேசவும் கிண்டலாகப் பேசவும் உரிமை படைத்தவர். என்னுடன் பழகத் தொடங்கிய காலத்தில் எளிய தொழிலாளி. இன்று நல்லசெல்வவளமுள்ளமுதலாளி தொழிலாளியாக இருக்குங்கால் என்னிடம் எவ்வாறு அன்பு செலுத்தினாரோ எவ்வாறு மதித்தாரோ, அதே அன்பு அதே மதிப்பு முதலாளியான பின்னரும் எள்ளளவும் குறையவில்லை. அதனாற்றானே இந்த முடியரசனும் பழகி வருகின்றேன். அடிக்கடி ஈரோட்டுக்கு என்னை அழைத்துச் சென்று விடுவார். பலநாள் அங்கே தங்குவேன். ஒரு குறையுமின்றிக் கவனிக்கப்படு வேன். அன்பால் நீராட்டப் படுவேன். அவர் துணைவியார் - என் உடன்பிறவாத் தங்கை - தங்கம்மாள், மக்கள், மருமக்கள், பேத்திகள் அனைவர்க்குமே நான் அயலான். அல்லன், உறவினனே. அத்தகு உரிமையும் அன்பும் கொண்ட குடும்பம் எனக்குப் புகலிடமா வுள்ளது. தளர்ந்த நிலையடைந்த எனக்கு அனைத்துப் பணிவிடைகளும் அங்கே நிகழும். ஒரு குழந்தையைப் பேணிக் காப்பது போல என்னைப் பேணிக் காப்பர். நான் அங்குத் தங்கியிருக்கும் நாளில் என்துணிகளையும் அவரேதுவைத்துத் தருவார் என்றால் அவ்வன்பின் அளவைஎவ்வாறுஎடுத்தியம்பஇயலும்? தொழிலாளியாக இருக்குங்கால் அவர் இதனைச் செய்திருப்பின் அது பெரிதாகத் தோன்றாது; முதலாளியாக இருக்கும்போது தானே அது பெருமை பெறுகிறது. ஒருமுறை நானும் அவரும் புதுக்கோட்டைக்குச் கென்ற பொழுது என் பெட்டியை அவர் எடுத்து வந்தார். அதனைக் கண்ட