பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அழகப்பன் எனக்குப் பல்வேறு உதவிகள் புரிந்துள்ளார். வளம வாழ்வில் திளைக்கும் அவர், இன்னும் என் தம்பியாகவே விளங்கி வருகிறார். பாவலர் மணி பழநி நான் பள்ளியிற் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இடையில் தமிழாசிரியராகச் சேர்ந்த பழநி, என் உயிர் நண்பர்களில் ஒருவர். இவர் இருமுறை செத்துப் பிழைத்தவர் வேலூர்மருத்துவமனையில் உடல்முழுவதும் அறுவைசெய்யப் பட்டவர். இன்றும் அவர் உடல் முழுவதும் பள்ளங்கள் விரவிக் கிடப்பதைக் காணலாம். அவர் இறந்துவிட்டதாகவே வேலூர் மருத்துவனையிலிருந்து காரைக் குடிக்குச் செய்தி வந்தது. அவர் அண்ணனும் மைத்துனரும் இறுதிச் சடங்கை, அங்கேயே செய்ய எண்ணிச் சென்றனர். ஆனால் அவர் மீண்டும் பிழைத்துக் கொண்டார். அவருக்கு எதுவும் ஆகியிருந்தால் ஒரு தலைசிறந்த பாவலனைத் தமிழகம் இழந்திருக்கும். நான் ஒர். உண்மையான நண்பனை இழந்திருப்பேன். உடல் முழுவதும் அறுவை செய்யப்பட்டமையால் திருமணத்தை மறுத்து விட்டார். அவரை நினையும் பொழுதெல்லாம், முதுமையிற் றுணையின்றி எவ்வாறு வாழப் போகிறாரோ? எனக் கவல்கிறேன். தமிழன்னை அவர்க்கு நல்வாழ்வு தரவேண்டும். உடல்நிலை காரணமாக முப்பத்தைந்து அகவைக்கு மேற்றான் பணியிற் சேர்ந்தார். சேர்ந்தது முதல் என் உயிர் நண்பராகி விட்டார். இவர்க்கும் ஏனைய நண்பர்க்கும் ஒரு வேறுபாடுண்டு. எவரும் என்பாற் சுடுமொழி கூறத் தயங்குவர். இவரோ அம்மொழி கூறத் தயங்கார் என் மென்மையான உள்ளம், பலநாள் வேதனைப் பட்ட துண்டு. ஆனால் அம்மொழிகள் என்நலங்கருதி உதிர்க்கப்பட்டனவே. நோதக்க நட்டார் சொலின் அது 'பெருங்கிழமை என்றுணர்ந்து பொறுத்துக் கொள்வேன் 'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு’ என்பது வள்ளுவமன்றோ! நகச் சொல்வார்பலர், அதன் பொருட்டு மிகச் சொல்வார் பலர், இடித்துரைத்துச் செவியிற் புகச் செய்வார் சிலரே. அச்சிலருள் இவரும் ஒருவர்.