பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 225 சுடுசொற்கள் எங்கள் நட்பிற்கு ஊறாக ஒருபோதும் நின்ற தில்லை. ஒருகால் ஏதோ காரணத்திற்காக என்னுடன் பிணங்கிப் பேசாதிருந்தார். ஆனால் எங்கள் வாய் பேசவில்லையே தவிர, உள்ளங்கள் பேசிக் கொண்டுதானிருந்தன. ஒருசமயம் நான் உடல்நலக்குறைவால் மிகச் சோர்ந்திருந்தேன். நடக்கும்பொழுது தடுமாறுவேன். (இத்தடுமாற்றந்தான் என்னைக் குடிகாரன் என ஊராரை எண்ணச் செய்தது) பள்ளிக்குள் மெதுவாக நுழைவேன். இதைப் பாார்த்த பழநி என்பால் வந்து என்ன அண்ணே செய்கிறது? நல்லமருத்துவரிடம் காட்டுங்கள், நான் பணம் தருகிறேன்' என்று சொன்னார். பிறிதொருகால் பாளையங்கோட்டைப் பேராசிரியர் பா.வளனரசு 'அனிச்சவடி என்னும் காப்பிய நாடகம் எழுதிய பழநிக்குப் பாளையங்கோட்டையில் பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்றார். வெறும் பாராட்டுச் செய்யாமல் ஏதாவது விருது (பட்டம்) வழங்குங்கள் என்றேன். என்ன விருது வழங்கலாம் என்று நீங்களோ சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார். 'பாவலர் மணி என்று திடீரென்று சொன்னேன். பாளையங்கோட்டையில் என் தலைமையிலேயே, விருது வழங்குவிழா நடைபெற்றது. அன்று முதல் 'பாவலர் மணி பழநி’ என அழைக்கப்படுகிறார். மேற்குறித்த இரு நிகழ்ச்சிகளும் நாங்கள் ஊடிக்கொண்டு, பேசாதிருந்த நாளில் நடைபெற்றன என்பதாற் குறிப்பிடுகின்றேன். என்பாடலை அவரிடம் காட்டுவேன், அவர் பாடலை என்னிடம் காட்டுவார். திருத்தங்களிருப்பின் முழுமனத்துடன்ஏற்றுக்கொள்வோம். ஆணவத்தால் திருத்தங்களை ஏற்காதிருப்பின். தமிழுக்கன்றோ இழுக்கு? இவ்வெண்ணந்தான் திருத்தங்களை ஏற்கச் செய்தது. 'அனிச்சவடி என்னும் காப்பிய நாடகம் என்னிடம் படித்துக் காட்டப் பட்ட பின்னரே அச்சேறியது. போட்டியிற் பரிசிலும் பெற்றது; பாராட்டும் பெற்றது: பல்கலைக்கழகங்களிற் பாடநூலாகவும் வைக்கப்பட்டது. அனிச்சவடிப் புகழ்' என அடைமொழிக்கும் உரியவரானார் பழநி, இதனைப் படித்துக் காட்டிய பொழுது அதன் சிறப்பிலும் இன்பத்திலும் தோய்ந்து திளைத்த என்னைக் கனவிலும்