பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[226 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பாட வைத்ததெனில், அந்நூலின் பெருமையை விளக்க வேண்டுமோ? அபபTடப்ெகிTெ பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக் கேட்டென்றன் நெஞ்சங் கிறுகிறுத்தேன்-வேட்டெழுந்து நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநி யெனும் பாடல் வலான் தந்தான் படைத்து. தேன்கலந்து தந்தனனோ? தெள்ளமுதந்தந்தனனோ? நான்கலந்தே இன்புற்றேன் நாடோறும் -வான்பறந்தேன் வாட்டுந் துயர்துறந்தேன் வையம்தனை மறந்தேன் பாட்டை அவன்படிக்கக் கேட்டு. கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே ஏற்றவரம் இம்மகற்கும் ஈந்தருள்வாய் - சாற்றுக் கனிச்சுவையை விஞ்சும் கவிமாலை நின்றன் அனிச்சவடிக் கீந்தான் அவன். இந்நூலுக்குப் பரிசில் தந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நூல் வெளியீட்டு விழா நடத்த நினைந்து முதலமைச்சராக விருந்த கலைஞர் அவர்களை அணுகியது. அதே நாளில் திருவண்ணாமலை மாநாட்டுக்குக் கலைஞர் இசைவு தந்து விட்டமையால் மறுத்து விட்டார். நான் சென்னைக்குச் சென்றேன். பெரியவர் வ. சுப்பையா பிள்ளையும் நானும் கலைஞரிடம் சென்றோம் பெரியவரைக் கண்டதும் நான்தான் அன்றே சொல்லிவிட்டேனே. திருவண்ணா மலை மாநாட்டுக்கு ஒத்துக் கொண்டமையால் உங்கள் நிகழ்ச்சிக்கு வர இயலாது, என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து, என்னங்க கவிஞர்?' என்றார். பழநி என் நண்பர். நம் இயக்கத்தவர். அனிச்சவடி அருமை யான நூல்: கவிதையென்றால் உங்களுக்கு விருப்பமானதுறையாயிற்றே. நீங்கள் வந்து....... என்று கூறிமுடிக்குமுன், கலைஞர் செயலரை அழைத்தார். திருவண்ணாமலை மாநாட்டை ஒத்தி வைக்குமாறு தந்தி கொடுத்துவிடு' என்று ஆணையிட்டுவிட்டு 'சரி உங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறேன்' என இசைந்துவிட்டார். கலைஞர் இசைந்த மையையும் என்பாற்கொண்டுள்ள அன்பையும் நினைந்து மகிழ்ந்தேன்.