பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப ப்ெ பறவையின் வாழ்க்கைப் பயணம் 227 I/ நியவர்கள் 'பாவலர் மணி என்னும் பெயருக்கு ஏற்பப் பாடல் புனைவதில் வல்லவர் நல்ல நாவன்மை படைத்தவர்; பட்டிமன்றங் களிலோ கருத்தரங்குகளிலோ பேசுங்கால், கை தட்டலுக்காகக் கதையளக்கமாட்டார்; கருத்தாழமிக்க பேச்சாகவே அமையும், நிறனாய்வில் வல்லுநர் உலகியலை நன்கு புரிந்தவர். பலதுறைகளிலும் தெlந்தவர். இக்காரணங்களால் இவரை நான் என் இளவலாக ஏற்றுக் கொள்ளவில்லை. பல்துறைவல்ல பாவலன் ஒருவன் என் தமிழன் னைக்குக் கிடைத்தானே! என்று பெருமிதங்கொண்டு மகிழ்கிறேன். இம் மகிழ்வுதானே எனக்குப் பெரிது? இவர் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பர் என் மக்களும் அவரைச் சித்தப்பா என்றுதான் விளிப்பர். எனினும் நான் தம்பி என்று இன்னும் சொல்லவில்லை. நான் பணியாற்றிய காலமெல்லாம், பள்ளி முடிந்து வரும் பொழுது தவறாது சிற்றுண்டிக் கடைக்குள் நுழைவோம், எதிர்ப்படு வோரையும் அழைப்பேன். உண்டி முடிந்துவரும் பொழுது, பணம் பழநிதான் தருவார். பெரும்பாலும் நான் தந்த தில்லை. என் சட் டைப் பையில் பணமிருந்தால்தனே நான் தர முடியும்? எந்தக் காலத்தில் என்பையில் பணமிருந்தது? நான் பணியிலிருந்து விடுபட்ட பிறகுதான் அவரை விட்டிருக்கிறேன். -- கூப்பிய கரங்கள் சுப்பையா s ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் விரிவாக்கத் துறை அலுவலராகப் பணிபுரியும் சுப்பையா என்பவர் நல்ல நண்பர். தொடக்கத்திலேயே மைத்துனரென்னும் உறவு முறையிற் பழகி விட்டவர். அவர் செய்த பதவிகள் என்னாலும் என் மக்களாலும் என்றும் மறக்க இயலாதன. பள்ளியிற் பிடித்தங்கள் பிறகடன்கள் போகtதியுள்ள சம்பளத்துடன் தான் இல்லத்துக்கு வருவேன். அதைக் கொண்டு இல்லறம் இருபது நாள் ஒடும். பின்னர் அது நிற்கும். சற்று அருகிலிருக்கும் நண்பர் கப்பையாவை நாடிச் செல்லுவேன். என்முகங்கண்டதும் குறிப்பால் 1 னர்ந்து கொண்டு தமது பணப் பையிலிருந்து இருபந்தைந்து ருவா எடுப்பார். --- . 'முதலிற் போய் அரிசி வாங்கிக் கொடுத்து விட்டு வாருங்கள்; பிறகு உரையாடுவோம்’ என்று பணம் கொடுத்து விரட்டுவார்.