பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 23 1 எனக்குக்குருதியழுத்தம் உண்டென்பதை அவர் அறிவார். அதனால் நான் உணர்ச்சி வயப்படுதல் கூடாதென அறிவுறுத்த எண்ணி, ஒருவன்தந்தை இறந்து விட்டார் என்று தந்தி வருமானால், அப்படியா? என்று தந்தியை வாங்கி மேசையின் மேல் வைத்து விடுதல் வேண்டும். இரத்த அழுத்தமுள்ளவர்கள் இந்த மனநிலை பெறுதல் வேண்டும்’ என ஒரு மருத்துவர் போல அறிவுரை நல்குவார். இவ்வாறு வாழ்க்கையுடன் ஒட்டிய நிகழ்வுகள் பல கூறி, நல்ல அறிவுரைகள் வழங்குவார். நல்லமைச்சர் போன்ற சான்றான்மை மிக்க நண்பர் இவர். அறிஞர் நடராசனார் காரைக்குடிப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் முதல் தொடர் புடையவர் இரா.நடராசனார் என்பவர். இவர் வரலாற்றாசிரியர். ஆங்கிலமும் தமிழும் நன்குணர்ந்தவர். எங்கள் நேரு, பிரிக்கப் பட்ட இந்தியா. தாகூரின் சதானா போன்றநூல்களை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். தமிழில் பாடல்கள் எழுதும் ஆற்றலும் படைத்தவர். திருக்குறளில் நன்கு பயிற்சிப் பெற்றவர். என் நினைவிற்கு வராத குறட்பாக்களை உடனே அவர் கூறுவார். தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களில் ஈடுபாடுடையவர். கவிதையை உணர்ந்து, சுவைக்கும் அருமையான சுவைஞர். என் பாடல்களில் தோய்ந்து தோய்ந்து சுவைத்துச் சுவைத்து மனம் விட்டுப் பாராட்டுவார். சுவையுணர்வை அவர் வெளிப்படுத்தும் பொழுது கவிதைக்குள் திளைத்துத் திளைத்து மிதப்பதைக் காணலாம். என்பாடலிற் சில அவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. __ இவர் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர். என் இன்ப துன்பங்களில் முழுப் பங்கு கொண்டு கண்ணிர் மல்கக் காட்சி தருவார். இன்பத்தில் மகிழ்ச்சிக் கண்ணிர். துன்பத்தில் துயரக் கண்ணிர். He என்பால் ஆழமான அன்பு பூண்டவர். நாங்கள் சந்திக்கும் நேரம் எல்லாம் ஆங்கிலக் கவிஞர். தமிழ்ப்பாவலர் எங்கள் முன் நிற்பர். அவர்களைப் பற்றியே உரையாடல் நிகழும்.