பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 நான் இப்பொழுது குருதியழுத்தத்தாலும் பார்வை மங்கியமை யாலும் தளர்ச்சியாலும் புறச் செலவொழித்து, இல்லத்துள் அடை பட்ட பறவையாக வாழ்ந்து கொண்டிருக் கிறேன். நடராசனாரோ என்னினும் முதியவர். என்னைக் காணவேண்டும் என்று அவா எழுமேல், நெடுந்தொலைவில் உள்ள அவரில்லத்தில் இருந்து என் இல்லம் நோக்கித் தளர்நடையுடன் வருவார். வந்து என்னைக் கண்டு அளவளாவிய பின், இருவரும் இலக்கியவானில் பறந்து பறந்து மகிழ்வோம். மழலைக் கவிச் செம்மல் வள்ளியப்பா குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, அன்பும் அடக்கமும் கொண்ட நற்றோழர் என்பாற் பேரன்பும் பெருமதிப்பும் உடையார். இவர்1948 முதல் தொடர்புடையவர். சென்னையிலிருந்து அவரும் காரைக்குடிக்கு மாற்றப்பட்ட பின்னர், தொடர்பு நெருக்கமாகியது. நான் எங்கேனும் செல்ல வேண்டியிருப்பின், அவருடைய மகிழுந்து என் இல்லத்திற்கு முன்வந்து நிற்கும். அந்த அளவிற்கு உரிமை கொண்டு பழகினோம். அவர்தம் இயல்புகள் என்னுளத்தைக் கவர்ந்தன. என் வாழ்க்கையில் ஒன்றியோர் சிலரைத் தவிர எளிதாக எவரையும் பாடாத இயல்புடைய நானே வலியமுன்வந்து அவரைப் பாடினேன். அவருடைய பாராட்டு விழாவில் மழலைக் கவிச் செம்மல் என்ற பட்டமும் வழங்கினேன். எவர் மனமும் புண்படப் பேசார் கருத்து வேறுபாடுகளுக்காக எவரையும் விட்டுவிடாது அரவணைத்துச் செல்வார். பிறரும் வளர வேண்டும் என்ற பரந்த மனங்கொண்டவர். குழந்தை யெழுத்தாளர் சங்கம் ஒன்று நிறுவிப்பலரும் முன்னேற்றம் பெறச் செய்து வருபவர். என் நூலுக்குப் பரிசில் கிடைக்க வேண்டுமென்று அவருள்ளம் எவ்வளவு,துடிக்கிறது என்பதை அவருடைய மடலே சான்றுபகரும். ........தங்களுக்கு இப்பரிசு கிடைத்தால், என்போன்ற எத்தனையோ நண்பர்களின் உள்ளம் மகிழுமல்லவா? அத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்களின் ஆற்றலை உணர்ந்தும் நேர்மையில்லாமல் நடந்து கொண்டதே..... அரசு! என்ற குறையையும் நிறைவு செய்யலாமன்றோ?' -அழ. வள்ளியப்பா.