பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கவியரசர் முடியரசன் படைப்புகள் -1 - எழுப்பவில்லையென்று வருத்தப்படுவார். அவ்வளவு அன்புள்ள ஒவ்வொரு நாளும் அவரில்லத்திலிருந்தே உணவு வந்துவிடு இவ்வன்புள்ளங்களுக்கு யாது கைம்மாறு செய்யவல்லேன்? திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் க.ப.சண்முக என்னும் நண்பர், இலக்கிய ஆர்வலர்; மொழிப் பற்றுடையார். இனிய பண்பாளர். என்பாற் பேரன்பு பூண்டவர். பக்தி' என்ே சொல்லலாம். என் வாழ்வு மலர வேண்டுமென்பதில் அளவில அக்கறை கொண்டவர். - நான் உடல் நலங்குன்றித் தளர்ச்சியுற்றிருப்பதை ஒருகால் எழுதியிருந்தேன். அதற்கு அவர் தந்த மறுமொழியால் அவர் தம் அன்பின் ஆழத்தை நன்கு அறியலாம். அம்மடலில் ஒரு பகுதி: 'நானும் தளர்ந்துவிட்டேன்’ என்று எழுதியிருந்தீர்கள். இதைப் பார்த்ததும் நான் தவித்துப் போய்விட்டேன். குழந்தையுள்ளமும், கொஞ்சு தமிழும் என்றும் தளராது. இவை இரண்டையும் கொண்டுள்ள தாங்கள் தளரவே கூடாது என வேண்டு கிறேன். - க. ப. சண்முகம் 22.4.88 புதுச்சேரி நண்பர்கள் பாவேந்தர் விழாவை முன்னிட்டுப் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்று அங்குச்சென்றிருந்தேன். அப்பொழுது கவிதைச் செல்வர் கல்லாடன் இல்லத்தில் சில நாள் தங்கினேன். அவரும் அவர் துணைவியார் கோப்பெருந்தேவியும் அளவு கடந்த அன்பு காட்டினர். அவர் தம் மக்களும் அப்படியே. தொடக்கத்திலேயே அன்பின் ஆழத்தைக் காட்டிவிட்டமையால் அப்பொழுதே அவர்தம்பியாகிவிட்டார். ஆனால் இது புதுமையாக ஏற்பட்ட உறவன்று. அவர் கவிஞர் வாணிதாசன் இளவல். அதனால் எனக்கும் இளவலானார். அண்ணனுக்கும் எனக்கும் ஏற்பட்ட இடைவெளி கல்லாடனால் நிறைவு செய்யப் பட்டு, மீண்டும் அக்குடும்பத் தொடர்பு தொடர்கிறது. அவர் மனைவி கோப்பெருந்தேவி கவிதை நெஞ்சங் கொண்டவர். கவிதையைச் சுவைப்பதிலே கை தேர்ந்தவர். இலக்கிய ஆர்வலர்.