பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 235 வாணியண்ணன் தங்கை ஆண்டாளின் திருமகளும் ஆவார். என்னை அண்ணனாக ஏற்றுக் கொண்ட ஆண்டாளின் மகளாதலின் எனக்கும் மருமகளானவர். எந்நேரமும் இலக்கியப் பேச்சுத்தான். துடிதுடிப்புடன் பேசுவார். என்னை மாமா என அழைப்பார். கல்லாடன் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார்; கவிதை ஊறும் நெஞ்சம்; இனியன பேசும் வாய்; புன்னகை தவழும் இதழ்; . அன்பு தவழும் விழி; மெல்லிய குரல்; அடக்கமான செயல் இவற்றின் கூட்டே கல்லாடன். இவர்தம் உறவினராகிய எழுச்சிப் பாவலர் இலக்கியன்.அன்பானவர் அமைதியானவர், செயற் புரட்சியாளர், அளந்து பேசுபவர், தனித்தமிழ் ஆர்வலர். நான் புதுவையில் தங்கியிருக்கும் பொழுது நிழல்போல உடனிருந்து உதவியவர். இம்மூவரும் என்னைப் பொன்னேபோற் போற்றிப் பேணி வருகின்றனர். கவிச் சித்தர் இளம் வழுதி இரண்டாம் முறை புதுவைக்குச் சென்ற பொழுது கடலூரைச் சார்ந்த கவிச் சித்தர் க.பொ.இளம் வழுதி நண்பரானார். கவிவளங் கொண்டவர். அரசு அலுவலகத்திற் பணிபுரிந்து கொண்டே தமிழால் ஈர்க்கப்பட்டுக்கவிதைநூல்கள் பல எழுதியுள்ளார். இனிய இயல்புள்ளவர். புரட்சிச் சிந்தனையாளர். எளிமையானவர். என்னை.அவரில்லத்திற்கு அழைத்துச் சென்று பலரையுங் கூட்டு வித்து, அவரிடையே உரையாடச் செய்து, பொன்னாடை பல அணிவித்து, வீடியோ படமெடுத்துப் பாராட்டினர். துணைவேந்தர் தொடர்பு பாவேந்தர் பாரதிதாசன் தொண்ணுற்றேழாம் பிறந்த நாள் விழா, 29,30-ஏப்பிரல் 1987ஆம் ஆண்டு புதுச்சேரிப்பல்கலைக் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது, அவ்விழாவில் தொடக்கவுரை யாற்ற நான் அழைக்கப் கொண்டாடப்பட்டது, அவ்விழாவில், தொடக்கவுரையாற்ற நான் அழைக்கப் பட்டிருந்தேன். அப் பொழுது துணைவேந்தர் முனைவர். கி.வேங்கடசுப்பிரமணியன் அவர்களுடைய தொடர்பு ஏற்பட்டது. இவர் பழகற்கினியர் நல்ல பண்பாளர், நாவன்மை படைத்தவர், முற்போக்குக் கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர், பாரதி, பாரதிதாசன் இருவரிடத்தும் ஈடுபாடு