பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 கொண்டவர். பல்கலைக் கழகத்தின் வாயிலாகத் தமிழுக்கு ஆக்கந் தேடி முனைவயவர். செயலாற்றுந்திறன் மிக்கவர் நான் உரையாற்றும் பொழுது பல்கலைக் கழகம் ஆற்ற வேண்டிய பணிகளாகச் சில வேண்டுகோள்களை முன் வைத்தேன். துணை வேந்தர், நன்றி கூறும் பொழுது என் வேண்டுகோள்களைவரவேற்று, அவற்றைச் செய்துமுடிக்க முயல்வேன் என்றும் உறுதி கூறினார். அதனோடமையாது தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கருத்திற் கொண்டு, அவற்றைச் செயற்படுத்த ஆவண செய்வோம்' என 12-5-87ல் மடலும் எழுதியிருந்தார். அவர் என்பாற் கொண்ட அன்பையும் மதிப்பையும் அள விட்டறிய அவர்தம் இருமடல்கள் சாலும். "பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய அறிஞர் பெருந்தகை கவியரசு முடியரசன் அவர்கட்கு." வணக்கம். நலம். நலமறியப் பேரவா. தாங்கள் புதுவைப் பல்கலக் கழகம் நடத்திய புரட்சித் கவிஞர் பாரதிதாசனாரின் 97ஆவது பிறந்த நாள் விழாவிற் கலந்து கொண்டமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வருகையால் எங்கள் கருத்தரங்குசிறப்புப் பெற்றது. தங்கள் கருத்துகளால் எங்கள் அரங்கு வலிமை பெற்றது. எனவே பல்கலைக்கழகச் சார்பிலும் என் சார்பிலும் உளமார் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. என்றும் தங்கள் கி. வெங்கடசுப்பிரமணியன். இம் மடல், விழாவிற் கலந்து கொண்டோர் அனைவர்க்கும் பொதுவாக விடுக்கப்பட்ட தட்டச்சு மடல். இம்மடலின் ஒரத்தில் என்றும் தங்கள் ஆசியை வேண்டுகிறேன் கி.வே. எனத் தாமே கையால் எழுதிய வரிகள் தாம் அவருடைய அன்பைப் புலப்படுத்துகின்றன. மற்றொரு மடல். "தங்கள் 7-10-87 நாளிட்ட மடல் பெற்றேன். 27-8-87 அன்று மேதகு ஆளுநரைச் சந்திக்கச் சென்று அவருடன் ஒரு