பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 குயிலும் குஞ்சும் பாவேந்தர் பாரதிதாசனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் லெவற்றை ஈண்டுக்குறிப்பிடுகின்றேன். பெரியாரிடம் கொண்ட பெருமதிப்பு திருச்சி தேவர் மன்றத்தில் பதினாறாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. 1943 அல்லது 1944 ஆம் ஆண்டு அம்மாநாடு நடைபெற்றது என்று கருதுகிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் மாநட்டுத் தலைவர். முதன்முதலாகப் புரட்சிக் கவிஞரைக் காணும் பேறு அப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள், பாவேந்தர் பாடல் பலவற்றை எடுத்துக் கூறிவிட்டுத் தென்றலின் குறும்பு' பற்றிய பாடலைத் தமக்கே உரிய பாங்கில் விளக்கிக் கூறும்பொழுது, அவையில் பெருஞ் சிரிப்பு எழுந்தது. மதர்த்த பார்வையுடைய புரட்சிக் கவிஞரே சிரித்துவிட்டார். அக்காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது. தலைமையுரையாற்றிய கவிஞர், பெரியார் அவர்கள் என்னைத் தலைவராக இருக்கச் சொல்லிவிட்டார்கள். அவர்களே என்னைத் தலைவராக்கிவிட்டதனால் எனக்குச் செருக்கு வந்துவிடப் போவதில்லை. பெரியாரவர்களிடம் வைத்துள்ள மதிப்பு என்றும் குறைந்துவிடப் போவதுமில்லை. எப்பொழுதும் சுயமரியாதை இயக்கத் தொண்டனாகவே இருப்பேன்" என்று மிகப் பணிவாகப் பேசிவிட்டுப் பழமைக் கருத்துகளை, மூடப்பழக்க வழக்கங்களை வழக்கம்போற் சாடினார். கவிஞர் மிகப் பணிவாகப் பேசியதைக் கேட்டதும் எங்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது. அரியேறு போன்ற தோற்றம், வணங்காமுடிப் பாண்டியன் அன்ன பார்வை,