பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 2.47 தோன்றும். எவரையாவது தாக்கிப் பேச நேர்ந்தால் (தாக்குதல் இல்லாத பேச்சு ஏது?) எதிரில் அவர் இருப்பது போலவும், அவரிடம் இவர் நேரே பேசுவது போலவும் அமைந்திருக்கும். அவையில் இருப்பவர்க்குக் கூறுவது போல் இராது. சென்னையில் மறைமலையடிகளார் தலைமையில் இந்தி யெதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் அம் மாநாட்டைக் கூட்டுவித்தார். 17-7-1948ஆம் ஆண்டு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலான பெருமக்கள் மாநாட்டிற் சொற்பொழிவு ஆற்றினர். நம் புரட்சிக் கவிஞரும் பேசினார். அப்பொழுது அவினாசிலிங்கனார் கல்வியமைச்சராக இருந்தார். கல்வியமைச்சர், மாநாட்டில் கவிஞருக்கு எதிரில் இருப்பது போலவும், அவரை நோக்கிக் கவிஞர் அறிவுரை கூறுவது போலவும் கவிஞரின் பேச்சு அமைந்திருந்தது. நீ ஏன் பயப்படனும்? துணிஞ்சு சொல்லு வடக்கே இருக்கிறவனுக்கு. எங்க நாட்டு மக்கள் - தமிழர்கள் இந்தியை விரும்பல்லே; அதனாலே இங்கே இந்தி வேண்டாம். அப்படின்னு தைரியமாச் சொல்லேன். அவன் என்ன உன் தலையையா கொண்டு போயிடுவான்? எங்களை எல்லாந் தாண்டித்தானே ஓங்கிட்ட வரணும்? நாங்க பார்த்துக்கிறோம். போ! துணிச்சலாகச் சொல்லு இப்படிப்பேசினார் கவிஞர். பெண்மையை மதித்தல் காரைக்குடி அழகப்பர் கல்லூரிக்கு நம் கவிஞர் ஒரு முறை வருகை தந்திருந்தார். நான் அப்பொழுது காரைக்குடியிற் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். கல்லூரியில் கவியரங்கம் நடை பெற்றது. நானும் கலந்து கொண்டேன். நம் கவிஞர் தலைவர். வேங்கடாசலம் என்ற அன்பர் கவியரங்கேறினார். நீண்ட நேரம் கவிதை படித்துக் கொண்டிருந்தார். பாவேந்தர் பொறுமை யிழந்தார். ஏம்பா இன்னம் எவ்வளவு நேரம் படிக்கப் போறே?" என்றார் இதோ முடித்து விடுகிறேன்' என்று வேங்கடாசலம் விடை தந்து விட்டுப் படிக்கத் தொடங்கினார். பாடலில், கல்லூரி மாணவர்கள், மாணவிகளைக் கேலி செய் வதாக அமைத்திருந்தார். இப்பகுதியைக் கேட்டதும் பாவேந்தர்