பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 -- கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நிமிர்ந்து அவரைப் பார்த்து, இந்தாப்பா நீ பாடினது போதும், நிறுத்து உட்கார் என்று வெகுண்டு கூறினார். பாடியவர் நிறுத்தி விட்டு அமர்ந்தார். பாவேந்தர் பேசத் தொடங்கினார். என்னதிமிரு இருந்தாபசங்க எம்பிள்ளைகளைக் கேலி செய்வாங்க? இந்தாம்மா! உங்களுக்குச்சொல்றேன். ஆளுக்கொரு கத்தி வச்சுக்குங்க; எவனாவது கேலி கிண்டல் பண்ணினா கத்தியை எடுத்து ஒரே சொருகு சொருகுங்க. அப்பத்தான் அடங்குவாங்க' - எதிரில் இருந்த மாணவிகளை நோக்கிக் கனல் தெறிக்கப் பேசினார். அவர் பேசும்போது இடையிலிருந்து கத்தியெடுப்பது போலவும் கையை ஓங்கிச்சொருகுவதுபோலவும் நடிப்புணர்ச்சியுடன் பேசினார். அவையில் ஒரே அமைதி. எவ்விடத்திலும் துணிந்து பேசுவார்; எதையும் எண்ணிப் பாரார். சரியென்று பட்டதை வெடிக்கத்' தயங்கார். இஃது அவருக்கு இயல் பாகவே அமைந்த பண்பு. தடையும் வேகமும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னமராவதி என்ற ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, நம் கவிஞரை அழைத்திருந்தனர். தற்செயலாக நான் அங்குச் சென்றிருந் தேன். மாணவர்கள் சிலர் வந்து, கவிஞர் கடுமையாகப் பேசிவிடப் போகிறார்; எங்களுக்குத் தொல்லைகள் நேரினும் நேரலாம்; அதனால் சற்று அமைதியாகப் பேசச் சொல்லுங்கள் - என்று என்னிடம் வேண்டினார். கவிஞர் இயல்பு எனக்குத் தெரியும். அதனால் முதலில் நான் மறுத்தேன். மாணவர் கெஞ்சியதால் அவர்களுடைய நிலைக் கிரங்கி இசைந்தேன். கவிஞர் வந்தவுடன் மிகவும் பணிவாக அவ் வேண்டுகோளைக் கூறினேன். ம்ம், பார்ப்போம் என்றார். கவிஞர் மேடையேறினார். பேசத் தொடங்கிப் பல கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துமொழிந்தார். அனைவர்க்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி, பேச்சுஅமைதியாக அமைந்து விட்டதே என்று. இறுதியாகத் தமிழுணர்வு பற்றிப் பேசத் தொடங்கினார். பள்ளிகளில் அந்நாளில் ஒரு குழப்ப நிலையிருந்தது. மாணவர் வருகையைப் பதிவு செய்யும்போது ஆசிரியர், மாணவர் பெயரை அழைப்பார். மாணவர்கள் பிரசண்ட் சார்' என்று கூறுவது வழக்கம் தமிழுணர்வுள்ள மாணவர்கள் உளேன் ஐயா