பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 249 வன்பர். ஆங்கில வகுப்பு ஆசிரியர்களுக்குத் தமிழிற் சொல்வது பிடிக்காது; கண்டிப்பார் இப்படியொரு நிலையிருந்தது அப்போது. இச்செய்தி பாவேந்தருக்கும் எட்டிவிட்டது. தமிழுணர்வு பற்றிப் பேசிக் கொண்டே வந்தவர். கடுமையாகப் பேசவேண்டாமென்று வங்கிட்ட வந்து சொல்றானே, எப்படிப்பேசாமலிருக்க முடியும்? வம் பிள்ளை, உளேன் ஐயா என்று தமிழிலே சொன்னா, சொல்லக் கூடாதுன்னு கண்டிக்கிறவனைச் சோட்டாலே அடிக்காம அவங் ட்ெட அமைதியா எப்படிப் பேசறது?’ என்று சீறி விட்டார். ஆசிரியர் முகங்கள் சுருங்கிவிட்டன. நாங்கள் ஒன்றும் சொல்லா இருந்தால் பேச்சு அமைதியாகவே சென்றிருக்கும். கடுமையாகப் பேச வேண்டாமென்று தடை கூறியதால் அவர் பேச்சு, திசை திரும்பிவிட்டது. உண்மைக் கவிஞனுடைய உள்ளப் போக்குக்கு - மணர்ச்சிக்குத் தடைவிதித்தால், அத்தடையை உடைத்து எறியும் வேகம் பிறந்துவிடும் என்னும் உண்மையை அன்று அறிந்து கொண்டேன். --- பாவேந்தரும் உலக நடைமுறையும் Հ շՆ):5 நடைமுறைக்கும் பாவேந்தருக்கும் வெகு தொலைவு. 1947ஆம் ஆண்டு என்று கருதுகிறேன். சென்னையில் 'பிராட்வே" என்றழைக்கப்பட்ட பிரகாசம் சாலைக்கு அடுத்த தெருவிலுள்ள ஒரு விட்டில் பாவேந்தர் தங்கி இருந்தார். அப்பொழுது கவிஞர் மு.அண்ணாமலையும் அவருக்குத் துணையாக உடனிருந்தார். நானும் நா.அறிவழகன் என்பவரும் தொடர்பு கொண்டிருந்த அழகு என்னும் இதழில் வெளியிடுவதற்காகப் பாவேந்தரிடம் கவிதை பெற்று வரச் சென்றோம். கவிதை வேண்டினேன். இதழை அனுப்பு: பார்த்துவிட்டுக் கவிதைதருகிறேன்- என்று கூறிவிட்டார். அவ்வமயம், கல்கியிதழில் குயில் விளம்பரம் வெளியிடும் பொருட்டு, விளம்பரம் ஒன்று எழுதி, இதைக் கல்கியிடம் கொடுத்து வா' என்று அங்கிருந்தவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அவர், அங்கேயே தயங்கி நின்றார். ஏன் நிற்கிறாய்? என்று கவிஞர் வினவ, பணம்......' என்று தயக்கத்துடன் இழுத்தார். .தற்குப் பணம்?' என்று வினவினார் கவிஞர். விளம்பரத்துக்குக் கேட்பார்கள் என்று அவர் சொன்னார். அதெல்லாம் ஒண்ணுங் கேக்கமாட்டான்; பாரதியைப் பற்றி எழுதணும்னு என்னைக்