பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 வேகக் கட்டுப்பாடு 1947-1949ஆம் ஆண்டுகளில் நான்சென்னையிற் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது பல முறை பாவேந்தரைக் காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். சில நிகழ்சசிகள் நினைவிற்கு வருகின்றன. தமிழாசிரியர் கழகத்தை இயக்கி வந்த தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவ. முத்து அவர்களுடன் மாணவர் மன்றத் தலைவர் டாக்டர் தருமாம்பாள் இல்லத்திற்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. பாவேந்தரும் அங்கு அடிக்கடி வருவார். தமிழா சிரியர் கழகச்சார்பில், கல்வியமைச்சர் அவினாசி லிங்கனாரிடம் ஒர் அறிக்கை தருவதற்காகத் தமிழ் நெறிக் காவலர், பெருந் தன்மையுடன் ஒர் அறிக்கை எழுதித் தருமாம்பாளிடம் காட்டு வதற்காகச் சென்றார். நானும் உடன் சென்றேன். அங்கே பாவேந்தரும் அமர்ந்திருந்தார். அறிக்கையைப் பாவேந் தரிடம் முதலிற் காட்டினார். தமிழ் நெறிக் காவலர் சிவ. முத்து அவர்கள் எவர் மனமும் புண்படப் பேசார்; சிறியராகினும் பெரியராகினும் மதிப்புடன் தான் பேசுவார். அத்தகைய இயல்பின ராகிய தமிழ் நெறிக் காவலர் எழுதிய அறிக்கை - அதுவும் அமைச் சருக்கு எழுதிய அறிக்கை எவ்வாறிருக்கும் என்பதைக் கூற வேண்டு வதில்லை. பாவேந்தரின் இயல்பு நமக்குத் தெரியும். வேகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர். அறிக்கையை அமைதியாகப் படித்துப் பார்த்த கவிஞர் அமைச் சருக்கு எழுதும் அறிக்கையில் இவ்வளவு வேகம் கூடாதே; தமிழா. சிரியர் கழகம் கொடுக்கும் அறிக்கை யல்லவா? சிலசில இடங்களில் மாற்றிக் கொள்ளுங்களேன்' என்று அறிவுரை புகன்றார். வேகத்தை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை யென்றாலும், மற்றவர்வேகத்தைக்கட்டுப்படுத்தத்தவறமாட்டார். அவ்வேகத்தால், நன்மைக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற இரக்கவுணர்வே, அவரை அவ்வாறு தடை விதிக்கச் செய்தது. 31-12-1955ஆம் ஆண்டு, காரைக்குடி அழகப்பர் கல்லூரிக் கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வருகை தந்தார் பாவேந்தர். காலையிலேயே வந்துவிட்டார். மாடியில் ஒர் அறையில்தங்கியிருந்த அவரை காணப் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரும் மற்றும் நண்பர் சிலரும் சென்றோம். நாங்கள் உள்ளே நுழையும் போது பாவேந்தர்,