பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் o 253 இடக்கையை மடக்கித் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருந்தார். வணக்கம், வணக்கம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொருவராக நுழைந்தோம் ம்ம். ம்ம் என்று சொல்லிக் கொண்டே படுத்திருந்தவர் பலர் வருவதைக் கண்டு எழுந்து அமர்ந்தார். பாருப்பா, அங்கே யிருந்து வரச் சொன்னவங்க தலைக்கு ஏதாச்சும் வேனுமான்னு கேட்கலே; விட்டுட்டுப் போயிட்டாங்க கையை மடக்கிப் படுத்துக் கொண்டேன், கை வலிக்குது என்று சலிப்புடன் கூறினார். அவருக்கு அருகிலிருந்த மேசைமேல் ஒரு தோற் பெட்டியும் அதன் மேல் தலையணையுடன் கூடிய சமுக்காளமும் இருப்பதை நான் சுட்டிக் காட்டி ஐயா, இதையெடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டிருக்கலாமே என்றேன். அட' ஆமாப்பா, நான் கொண்டு வந்ததுதான். மறந்துட்டேன்' என்று சிரித்துக் கொண்டார். சிரிப்பில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அவரே கொணர்ந்த தலையணையை மறந்து விட்டார். எதிரில் இருந்தும் பாராமல் இருந்திருக்கிறார். கை வலிக்கப் படுத்துக் கொண்டிருக்கிறார். வலியெடுத்த பின்னரும் நினைவு கொள்ளாமல் தம்மைக் கவனிக்கவில்லை என்று மற்றவர் களைக் குறையும் கூறுகிறார். இந்தக் குழந்தையுள்ளத்தை-தம்மை மறந்த நிலையை, இவரைத் தவிர வேறு எவரிடங்காண இயலும்? மாலையிற் கவியரங்கம் நடைபெற்றது. "எண்ணம்’ என்ற தலைப்பில் நான் பாடினேன். நிகழ்ச்சி முடிந்தது. தனியே சந்தித்தோம். என்னை அழைத்துப் 'பாட்டு நல்லா இருந்தது, இவ்வளவு வேகம் வேண்டாம், கொஞ்சம் குறைப்பது நல்லது, பிரின்சிபால் (ஏ. என். தம்பி) மலையாளியா இருந்தாலும் தமிழுக்கு உதவியாய் இருக்கிறாரு நீ வேகமாகப் பாடி, அதனாலே அவருக்கு ஏதாவது தொந்தரவு வரக்கூடாது இல்லையா? கொஞ்சம் கட்டுப்படுத்திக்கோ என்று அறிவுரை கூறினார். நான் அப்படியொன்றும் வேகமாகப் பாடிவிட வில்லை. எனினும் பிறருக்குத் தொல்லைகள் வரக்கூடாதே என்ற உயர் எண்ணத்தால் அந்த எரிமலை, இந்தச்சிறிய தீப்பொறிக்கு அமைதி பற்றிக் கூறியது. சேரதாண்டவம் சேரதாண்டவம் பற்றிய செய்தி, பாவேந்தருடன் நேரடித் தொடர்பு உடையதன்று; எனினும் இங்கே நினைவு கூரக் கடமைப்