பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பட்டுள்ளேன். சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு மாடி வீட்டில் தங்கி, டி.என். இராமன் அவர்கள் குயில் இதழை நடத்திக் கொண்டிருந்தார். நானும் கவிஞர் தமிழ் ஒளியும் அதில் பணி யாற்றிக் கொண்டிருந்தோம். பாவேந்தருக்கும், இராமனுக்கும் மாறுபாடு ஓங்கி நின்ற காலம் அது. இருவரும் இணைந்திருந்த பொழுது சங்கநூலில் வரும் ஆட்டனத்தி, ஆதிமந்தி பற்றித் தாம் புனைந்த கற்பனைக் கதையைப் பாவேந்தர், இராமனிடம் கூறியிருந்தார். அதை அப்படியே நினைவில் வைத்திருந்த இராடின் காப்பியமாக்கிக் தருமாறு என்னிடம் வேண்டினார். இது பெருங்குற்றம், பாவேந்தருக்குச் செய்யும் வஞ்சனை என்று கூறி மறுத்துவிட்டேன். தமிழ் ஒளி பாடித்தர இசைந்துவிட்டார். பாவேந்தரிடம் சிறிது காலமாவது பயின்ற நீங்கள் இதற்கு ஒப்பலாமா? என்று தமிழ் ஒளியைக் கடிந்து கொண்டேன். நல்ல வேளையாகப் பாவேந்தரேஅக்கதையைச் சேரதாண்டவம்என்றநூலாக வெளியிட்டு விட்டார். கவிதையும் இலக்கணமும் சமுதாயத்தில் மறுமலர்ச்சி காணத் துடிதுடிக்கும் புரட்சிக் கவிஞர் கவிதையில் இலக்கண நெறி பிறழ்தல் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர். கவியரங்குகளில் அடிக்கடி இதனை அழுத்தமாக வற்புறுத்திக் கூறுவார். நடந்த நிகழ்ச்சி யொன்றைக் கூறி, அவருடைய உறுதிப்பாட்டை விளக்குவது பயனுடையதாகும். திராவிடர் கழகத்தில் உறுதியான பற்றுடைய போராசிரியர் ஒருவர் புதுக்கோட்டையில் தங்கியிருந்தார். தமிழ்மொழிக்காகப் பல போராட்டங்கள் நிகழ்த்திப் பல இன்னல் களுக்கு ஆளானவர். பாவேந்தரிடம் நீங்காப் பற்றுடையவர். இருவரும் நன்கு அறிமுகம் ஆனவர்கள். பேராசிரியர் தமக்கு நேர்ந்த இடர்ப்பாடுகளை ஒரு சிறு கவிதை நூலாக்கி, அதற்கு மதிப்புரை வாங்கிவருமாறு, கரந்தைக்கு வந்திருந்த பாவேந்தர்பால் ஒருவரை விடுத்தார். சென்றவர், பாவேந்தரைச் சந்தித்து, நூலைத்தந்து மதிப்புரை வேண்டினார். கவிஞர் அந் நூலைப்படித்துப் பார்த்தார். குற்றியலுகரம் பிரிக்கப்பட்டு, அஃது ஒர் அசையாகவும் அலகிடப்பட்டிருந்தது. இலக்கண நெறி கெட்டி ருப்பது கவிஞருக்குப்பிடிக்கவில்லை.