பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 259 எங்கள் பேச்சொலி கீழ்வீட்டுக்குச் சென்றுவிட்டது. உடனே மணியொலி வந்தது. இன்னும் துரங்கலையா? ஒரு மணிக்கு மேல் ஆகுது! இன்னும் என்ன பேச்சு? இப்பப் படுக்கிறீங்களா இல்லையா?” என்ற அதட்டலும் தொடர்ந்து வந்தது. படுத்துட் டோம் படுத்துட் டோம் இது கவிஞர் குரல். சிறிது நேரம் அமைதி. மீண்டும் கவிஞர் பேசத்தொடங்கினார். மெதுவான குரலில் பாரதியாரைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. பாரதியாரிடம் பாவேந்தர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டோம். புதுச்சேரியில் பாரதியார் தங்கியிருந்தபொழுது ஒருநாள் காகிதங்களை வைத்துக் கொளுத்திப் பால் காய்ச்சிய விதத்தையும், புகை மண்டலத்தின் ஊடே பட்ட பாட்டையும், கடைசியில் பால் புகை நாற்றம் அடித்துக் குடிப்பதற்குத் தகுதியில்லாமற் போனதையும் சொல்லிசொல்லிச் சிரித்தார். அப்பொழுது பாரதியார் பெண்களின் அருமைப்பாட்டையுணர்ந்து பெருமையுறக் கூறியதாகவும் பாவேந்தர் எம்மிடம் உரைத்தார். பிறகு கவிஞரின் பேச்சு, கவிதையுலகம் திரும்பியது. பயன் படத்தக்க அறிவுரைகளை எங்களுக்கு அறிவுறுத்தினார். கவிதை எழுதுறதுக்கு முன்னாலே நிறையப் படிக்கனும். சில பேர் படிக் காமலே கவிதை எழுதுறான். எதிர்பாராமல் இரண்டொன்று நன்றாக அமைந்து விடுவதும் உண்டு. அதற்காக அவனைப் பாராட்டிவிட முடியாது. தேங்கிய தண்ணிரிலே ஒரு பூச்சி திரியும்; வண்டு மாதிரிக் கருப்பாக இருக்கும்; அது எப்போதும் வேகமாக வட்டமிட்டு வட்டமிட்டுச் சுழன்று சுழன்று ஒடிக் கொண்டே யிருக்கும். சில வேளைகளில், அது சுழல்வது தண்ணிர் மேலே அ. இ. என்று எழுதுவது போலக் காணப்படும்.' -- "அதைப் பார்த்துவிட்டு 'ஓ! இந்தப் பூச்சி, அ. இ. என்று எழுதுகிறது பார் என்று யாரும் வியந்து பாராட்டுவதில்லை. அதுபோலவே படிக்காதவன் பாட்டும் தற்செயலாக அமைந்து விடுகிறது. அதை வைத்துக்கொண்டு பாராட்டுவது அறிவுடைமை யாகாது. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடையார் - என்று குறள் கூறுகிறதே. என விடாது பேசிக் கொண்டிருந்தார்.