பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 உச்ச நிலைக்குச் சென்ற பாவேந்தரின் குரல், மீண்டுங் கீழ் வீட்டிற்குச் சென்றுவிட்டது. வை. சு. சண்முகனார் வேகமாக நான்கைந்து முறை மணியடித்தார். அதட்டியும் உரத்தும் குரல் கொடுத்தார். 'கவிஞரே, இப்போ துரங்கிறீரா இல்லையா? நான் மேல. வரணுமா?’ என்று கத்தினார். மடியில் தலையணையை வைத்து அதன் மேல் முழங்கைகளை ஊன்றிப் பேசிக் கொண்டி ருந்த பாவேந்தர், மடியிலிருந்த தலையணையை மெத்தைமேல் விசி எறிந்தார். தாவி, அப்படியே குப்புற விழுந்தார். தலையணையில் முகத்தைப் புதைத்துப்படுத்துக் கொண்டார். பெற்றோர்க்கு அஞ்சிப்படுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை போலக் காணப்பட்டார் அப்பொழுது. பின்னர் அருமையான உறக்கம் அவர்க்கும்.எங்களுக்கும். பொழுது புலர்ந்தது: கவிஞர் விழிகளும் மலர்ந்தன. எழுந்து மெத்தையில் அமர்ந்து கொண்டார். பல பேசினார். இரண் டொன்றே நினைவு கொள்ளமுடிகிறது. ஒன்று. புத்தகம் வெளியிடுகிற பசங்களுக்குக் கொள்ளையடிக்கிறதே தொழிலாப் போச்சு. நம்ம புத்தகத்தை வெளியிடுறதாச் சொல்லி, ரொம்பப் பணத்தைத் தின்னுட்டான் என்று சலிப்புடன் பேசினார். யாரை முதல்நாள், 'நம்ம பிள்ளை' என்று உரிமை கொண்டாடினாரோ அதே பிள்ளையைத் தான், கொள்ளையடிக்கிறான், என்று விடிந்த பிறகு சொல்கிறார். புத்தகம் அழகாக வெளியிடுகிறான். அந்த அளவில் நம்ம பிள்ளை பணத்தைச்சுரண்டுகிறான்-அந்த நிலை வரும்போது 'கொள்ளைக்காரன் ஒருவனைப் பற்றிப் பாவேந்தர் தீர்ப்புக் கூறினால் அந்தந்த நேரத்திற்கு ஏற்றபடிதான் இருக்கும். ஏற்றபடிதான் என்று சொன்னவுடன் பாவேந்தர் கூறிய இலக்கணக் குறிப்பொன்று நினைவிற்கு வருகிறது 'சொன்னபடிச் செய்தான் என்று சிலர் எழுதுகின்றனர். அது தப்பு. சொன்னபடி செய்தான் என்றே எழுதவேண்டும். படி என்ற சொல், அப்ப்டிச் செய்தான் எப்படிச்செய்தான் எனச் சுட்டெழுத்து வினாவெழுத்தை அடுத்து வரும்போது மட்டும் வல்லினம் வந்தால் மிகுந்து வரும்: மற்ற இடங்களில் மிகாது என விளக்கிக் கூறினார். அதன் பின்னர், தமிழனுக்கு இனவுணர்வே அற்றுப் போய் விட்டது என்றும் அவ்வுணர்வு மீண்டும் தழைத்தோங்க வேண்டு மென்றும் ஈடுபாட்டுணர்வுடன் எடுத்துக்கூறினார். அப்பொழுது அவர் கூறிய மொழிகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன.