பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 தேர்தல் திருவிழா: மதுரைத் தியாகராசர் கல்லூரியில் ஒரு கவியரங்கம் என் தலைமையில் நிகழ்ந்தது. தேர்தல் திருவிழா என்பது தலைப்பு பேராயக் கட்சி ஆட்சியிலிருந்த காலம் அது. 'என் பாடலில் முத்தால் ஒளி படைத்த மூதூர்' என மதுரையைக் குறிப்பிட்டேன். 'பாண்டிய நாடு முத்துடைத்து' என்பதைக் குறிப்பது ஒரு பொருள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முத்தால் புகழ் கொண்ட மூதூர் என்பது குறிப்புப் பொருள். மதுரை முத்து என்றால் அனைவரும் அறிவர்.” குறிப்புப் பொருளை உணர்ந்து கொண்ட மாணவர் கையொலி எழுப்பினர். பேராயக் கட்சியைச்சார்ந்த மாணவர்க்கு ஒரே எரிச்சல். என் பாடலில் தேர்தலையும் திருவிழாவையும் ஒப்பிட்டுப் பல கருத்துகள் சொன்னேன். அவற்றுள் ஒன்று திருவிழாவுக்குப் பத்தர்களும் வருவர் முடிச்சவிழ்க்கும் திருடரும் வருவர்; அது போலத் தேர்தலுக்கு நல்லவரும் வருவர். தீயவரும் வருவர். மக்கள் தாம் விழிப்பாக இருத்தல் வேண்டும் என்று குறிப் பிட்டேன். யார் நல்லவர்? யார் தீயவர்? என்று குறிப்பிடவில்லை. பொதுவாக நல்லவர் என்றுதான் கூறினேன் ஆளுங்கட்சியைத்தான் தீயவர் என்று குறிப்பிடுவதாகக் கருதிக் கொண்டு பேரயாத்தார் மேலும் உணர்ச்சி வயப்பட்டனர். என் தலைமைப் பாடலுக்குப் பிறகு வாக்காளர், ஆளுங் கட்சி' எதிர்க்கட்சி என்னும் தலைப்புகளில் பலர் பாடினர். பாடினோர் அனைவரும் பத்து மணித் துளிக்குக் குறையாமற் பாடினர். ஆளுங்கட்சி' என்னும் தலைப்பைப் பாடியவர் ஒரே மணித்துளியில் பாடி அமர்ந்து அனைவரையும் திகைப்புக்கு ஆளாக்கிவிட்டார். அடுத்து எதிர்க்கட்சி என்பது பாடப்படவேண்டிய தலைப்பு. அத்தலைப்பிற் பாடவேண்டியவரை அழைக்க நான் எழுந்து, ஆளுங்கட்சி இவ்வளவு விரைவில் ஒதுங்கும் என்று நான் கருத வில்லை. எதனாலோ ஒதுங்கிவிட்டது. இனி எதிர்க்கட்சிக்கு வரவுரை கூறுவோம்’ என்று நகைச்சுவையாக நான் குறிப்பிட்டதும், பேராயத்தார் வெகுளிச் சுவையை வெளிப்படுத்திவிட்டனர். ஒரே ஆரவாரம்! மேசைகள் நாற்காலிகள் முழங்கின. கூச்சல் குழப்பம்!