பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 27 ה பேராசிரியர் இலக்குவனார் எழுந்து அமைதிப்படுத்தியபின் அரங்கம் தொடர்ந்தது. பேராயத்தார் என்னைத் தாக்குவது என்று முடிவு செய்திருந்த செய்தியைப் பின்னரே அறிந்தேன். அந்நல்வாய்ப்பு எனக்குக் கிட்டாது போயிற்று, முருகா! முதல்வா! தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரியில் ஒரு கவியரங்கம், தவத்திரு அடிகளார் தலைவர். வாழையடி வாழை என்னும் பொதுத்தலைப்பிற் பாவலர் பலரைப் பற்றிக் கவிஞர்கள் பாடினர். எனக்குப் பாரதியார் என்னும் தலைப்பு வழங்கப் பட்டது. அனைவரும் பாடியபின் இறுதியில் நான் பாடினேன். தொடக் கத்தில், முருகா! முதல்வா என்று பாடி நிறுத்தினேன். பேராசிரியர்கள், அடிகளார். உடன்பாடியோர் அனைவரும் திகைத்து என்முகத்தையே உற்று நோக்கினர். முடியரசன் முருகனைப் பாடுகிறானே! என்பதுதான் அவர்கள் திகைப்புக்குக் காரணம். ஒருவேளை அடிகளார் தலைவராக இருப்பதால் முருகனைப் பாடியிருக்கலாமோ? என்பது அவர்கள் நினைப்பு. அவருடைய திகைப்பும் நினைப்பும் அகலுமாறு முருகா கல்லூரி முதல்வா என்று நான் கூறியதும் அரங்கமே குலுங்கியது அவர்கள் கை தட்டும் ஒலியால். கல்லூரியின் முதல்வரின் பெயர் முருகையன். அதனால் முருகாகல்லூரிமுதல்வாஎனக்குறிப்பிட்டேன். அரசியல் அறிஞர் விளம்பி ஆண்டுப்பிறப்பன்று திருச்சி வானொலி நிலையத்தார் கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தலைவர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன்.அவர்கள். என்தலைப்பு அரசியல் அறிஞர் என்பது. அரங்கம் தொடங்கியது. பாவலர் பாடினர். ஒவ்வொருவரும் தலைவர்க்கு வணக்கம் சொல்லும் முறையில் பாடினர். நான் தலைவருக்காக ஒரு வரி கூடப்பாடாது சென்றிருந்தேன். மற்றவர்கள் பாடியதும் என் தவற்றை உணர்ந்து, அப்பொழுது இரண்டு சொற்களை மட்டும் சேர்த்துத் துரத்துக்குடி முத்தே' என விளித்தேன். அவ்விரு சொற்கள் பேராசிரியர் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன என்பதை அவர் தம் முடிப்புரையால் தெரிந்து கொண்டேன்.