பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நானும் மனைவியும் உரையாடுவதாகப் பாடல் புனைந்திருந் தேன். புத்துலகம் காணப் பாடல் புனையத் தொடங்கி விட்டீர்! மகிழ்ச்சிதான்! நாட்டைப் புதுப்பிக்க வழி சொல்லும் நீங்கள் வீட்டைப்புதுக்க வழி காணாது இருக்கின்றீரே!” என்று வறுமை நிலையைச் சுட்டுகிறாள். நான் வெகுண்டு, -- 'நேற்றே விளம்பி நெடுமூச்சு வாங்கவைத்தாய்' 'இன்று விளம்பி எடுக்காதே என்னுயிரை என்று பாடினேன். நேற்றும் விளம்பினாய், இன்றும் விளம்பி என்னை வருத்தாதே - என்ற பொருளில் அவ்வரிகள் அமைந்துள்ளன. அவ்வரிகளில் நேற்று ஏ விளம்பி ஆண்டு, இன்று விளம்பி ஆண்டு என்னுங் குறிப்பு அமைந்துள்ளமையை அறிந்து கொண்ட தலைவரும் அவையினரும் பெரிதும் மகிழ்ந்தனர் பேரறிஞர்.அண்ணாவை மனத்திற்கொண்டே அரசியல் அறிஞரைப் படைத்திருந்தேன். ஆயினும் பெயர் சுட்டவில்லை அந்த அரசியல் அறிஞரின் பெயரைச் சொல்லுங்களேன்' என்று என் மனைவி வினவுகிறாள். இந்த இடத்தில் வெளிப்படையாகப்பெயர்சொல்லுதல். கூடாது என்று காதோடு சொன்னேன் என்று பாடலை முடித்து விட்டேன். அரங்கம் நிறைவு பெற்றது. நான் அறிஞர் என யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது தலைவர்க்குத் தெரிந்திருப்பினும், அந்த அறிஞர் பெயரை என் காதோடு சொல்லலாமா என நகைத்துக் கொண்டே வினவினார். மனைவி காதில் மட்டும் தான்சொல்லலாம், மற்றவர் காதில் சொல்லுதல்கூடாது. சொல்லிவிட்டால்அது மறைமொழி இரகசியம்) ஆகாது என்றேன். வெடித்த சிரிப்பு... - பின்னர் அனைவரையும் நிலைய இயக்குநர் ஈசுவரதாசு என்பாரிடம் அழைத்துச் சென்றனர். தலைவர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டு வருகையில் என்னை அறிமுகம் செய்து, என் தலைப்பையும் கூறினார். ஒ அரசியல் அறிஞரா? ஆபத்தான தலைப்பாயிற்றே! எப்படிப் பாடினார்? என்று இயக்குநர் ஆங்கிலத்தில் வினவினார்.